ஆலிவர் ஹார்ட்
ஆலிவர் சைமன் ஹார்ட் (Oliver Simon Hart, பிறப்பு: அக்டோபர் 9, 1948) இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் பொருளாதார நிபுணர் ஆவார். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பென் ஓம்சுடொரொமுடன் இணைந்து வழங்கப்பட்டது.
ஆலிவர் ஹார்ட் Oliver Hart | |
---|---|
பிறப்பு | ஆலிவர் சைமன் டார்சி ஹார்ட் அக்டோபர் 9, 1948 இலண்டன், இங்கிலாந்து |
வாழிடம் | கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், அமெரிக்கா |
தேசியம் | பிரித்தானியர், அமெரிக்கர் |
துறை | சட்டமும் பொருளியலும் |
பணியிடங்கள் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் இலண்டன் பொருளியல் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | கிங்க்சு கல்லூரி, கேம்பிரிட்சு, இளங்கலை வாரிக் பல்கலைக்கழகம், முதுகலை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், முனைவர் |
விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2016) |
துணைவர் | ரீட்டா கோல்ட்பர்க் |
வாழ்க்கை வரலாறு
தொகுஆலிவர் ஹார்ட் பிளிப் ஹார்ட், ரூத் மேயர் தம்பதியர்க்கு மகனாக இலண்டனில் பிறந்தார். இவரின் தாய், தந்தை இருவரும் யூத இனத்தை சார்ந்தவர்கள். இவரது தந்தை நோபல் மொன்டகு குடும்பத்தை சார்ந்தவர். இவரது மூதாதையர் முதல் பெரொன் சாமுவேல் மொன்டகு ஆகும்.[1]
ஹார்ட் கேம்பிரிட்ச் கிங்க்ஸ் கல்லூரியில்கணிதத்தில் இளநிலை பட்டம் 1969 ஆம் ஆண்டு பெற்றார். இதன் பின் பொருளியலில் முதுகலை பட்டம் வாரிக் பல்கலைக்க்ழகத்தில் 1972 ஆம் ஆண்டு பெற்றார். பொருளாதாரதில் முனைவர் பட்டம் பிரின்ஸ்டனில் 1974 ஆம் ஆண்டு பெற்றார். 1993 ஆம் ஆண்டு முதல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில்[2] பொருளியலில் பேராசிரியராக இருக்கிறார்.
ஹார்ட் ஒப்பந்தக் கோட்பாட்டுக்காக[3] 2016 ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வென்றார்.
ஹார்ட் அமெரிக்க குடியுரிமை[4] பெற்றுள்ளார். அவர் ரிட்டா பி. கோல்ட்சுபெர்கை திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் Motherland: Growing Up With the Holocaust[2][5] என்கின்ற புத்தகம் எழுதியுள்ளார். இவர்களூக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்கள் உள்ளனர்.
உசாத்துணை
தொகு- ↑ "Jewish economist at Harvard shares Nobel Prize". Jewish Telegraphic Agency. October 10, 2016. http://www.jta.org/2016/10/10/news-opinion/world/oliver-hart-bengt-holmstrom-share-nobel-economics-prize.
- ↑ 2.0 2.1 "Oliver Hart Named First Andrew Furer Professor of Economics". Harvard Gazette (Harvard University). October 2, 1997 இம் மூலத்தில் இருந்து March 9, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160309232613/http://news.harvard.edu/gazette/1997/10.02/OliverHartNamed.html.
- ↑ Appelbaum, Binyamin (October 10, 2016). "Oliver Hart and Bengt Holmstrom Win Nobel in Economics for Work on Contracts". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/10/11/business/nobel-economics-oliver-hart-bengt-holmstrom.html.
- ↑ "American-Jewish, Finnish economists win Nobel for contract theory". Times of Israel. October 10, 2016. http://www.timesofisrael.com/jewish-finnish-economists-win-nobel-for-contract-theory/.
- ↑ Ringstrom, Anna; Rundstrom, Bjorn (October 10, 2016). "After Winning Economics Nobel, Oliver Hart Hugs Holocaust Memoirist Wife". The Forward. http://forward.com/news/breaking-news/351674/after-winning-economics-nobel-oliver-hart-hugs-holocaust-memoirist-wife/.
வெளி இணைப்புகள்
தொகு- Oliver Hart's home page at Harvard - ஆலிவர் ஹார்ட்டின் ஹார்வேர்டின் முகப்புப் பக்கம்