ஆலுவா மகாதேவர் கோயில்

கேரளத்தில் உள்ள சிவன் கோயில்

ஆலுவா மகாதேவர் கோயில் (Aluva Mahadeva Temple) என்பது ஒரு பழமையான சிவன் கோவில் ஆகும். இந்தக் கோயில் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில், பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. [1] இக்கோயிலின் பிரதான தெய்வமான சிவன், முதன்மைக் கருவறையில், மேற்கு நோக்கி அமைந்துள்ளார். நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராமர் இங்கு சிவனை நிறுவினார் எனப்படுகிறது. இது கேரளத்தின் 108 சிவன் கோயில்களின் ஒரு பகுதியாகும். [2] இந்த கோயில் பூக்காட் சந்திப்பிலிருந்து 4 கி.மீ தொலைவில்   பூகாட் - தோரைகடவு சாலையில் அமைந்துள்ளது. [3] இந்தக் கோயிலின் விழாவாக நடத்தப்படும் ஆலுவா சிவராத்திரி விழா ஒரு புகழ்பெற்ற திருவிழா ஆகும்.

ஆலுவா சிவன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:எர்ணாகுளம் மாவட்டம்
அமைவு:பெரியாறு
ஆள்கூறுகள்:10°07′01″N 76°21′13″E / 10.1168843°N 76.3535963°E / 10.1168843; 76.3535963
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளபாணி கட்டிடக்கலை

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-28.
  2. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  3. "Manappuram Sree Mahadeva Temple". Manappuram Sree Mahadeva Temple (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலுவா_மகாதேவர்_கோயில்&oldid=3836925" இலிருந்து மீள்விக்கப்பட்டது