ஆலுவா சிவராத்திரி விழா
ஆலுவா சிவராத்திரி விழா (Aluva Sivarathri festival) என்பது இந்திய மாநிலமான, கேரள மாநிலத்தின், ஆலுவாவில் உள்ள ஆலுவா மகாதேவர் கோயிலில் கொண்டாடப்படும் சிவராத்திரி விழா ஆகும். [1] ஆலுவாவில் கொண்டாடப்படும் சிவராத்திரி விழாவானது கேரளத்தில் மிகவும் பிரபலமாகும். பிப்ரவரி - மார்ச் மாதங்களில் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் சிவராத்திரி பண்டிகை கொண்டாபட்டடுகிறது.
பெரியாறு ஆற்றின் கரையில் உள்ள சிவன் கோவிலில் ஆலுவா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது, இந்த இடம் அலுவா மணல் புரம் ( மணல் தரை) என்று அழைக்கப்படுகிறது. [2] [3] இந்த ஆற்றின் கரையோர மக்கள் வண்ண விளக்குகளால் ஆற்றின் கரைகளை அலங்கரிப்பது கண்கொள்ளா காட்சியாகும். பக்தர்கள் விடியவிடிய விழித்திருந்து சிவனை வழிபடுகின்றனர்.
சிவராத்திரியின் புனித இரவைத் தொடர்ந்து காலையில் யாத்ரீகர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் (நீர்தார் சடங்கு) செய்கின்றனர். [4] பெரியாறு, ஆலுவா மணல் புரம் கரைக்கு அருகில், மக்கள் பொருட்களை வாங்குவதற்கான, கடைகள், கண்காட்சிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சாகச சவாரிகள் போன்ற பல தற்காலிக வணிக நடவடிக்கைக்கான கடைகள் நிறுவப்படும். பித்ரு தர்ப்பணத்துக்குப் பிறகு இது இரண்டு வாரங்களுக்கு இருக்கும்.
இந்த திருவிழா சிவபெருமானின் நினைவாக கொண்டாடப்படுகிறது. [5]
படக்காட்சியகம்
தொகு-
ஆலுவ மணல் புரத்தில் உள்ள சிவன் கோயில்
-
அலுவ மணல் புரத்தில் ஆலுவா சிவராத்திரி பித்ரு தர்ப்பணம்
-
சிவராத்திரி பித்ரு தர்ப்பண சடங்குகள்
-
சடங்குகளுக்குப் பிறகு தலைமுழுகள்
-
பித்ரு தர்ப்பண சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்
குறிப்புகள்
தொகு- ↑ http://www.thehindu.com/news/cities/Kochi/aluva-manappuram-all-set-for-sivarathri-rituals/article22735603.ece
- ↑ https://www.deccanchronicle.com/nation/in-other-news/240217/aluva-set-for-sivaratri-festival-today.html
- ↑ http://www.india.com/travel/articles/mahashivratri-celebrations-in-kerala-how-shivratri-is-celebrated-in-aluva/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
- ↑ John Kunthara, B. (11 May 2016). "Nine Days: A Rescue Mission".