ஆல்டர்மானைட்டு
ஆல்டர்மானைட்டு (Aldermanite) என்பது ஓர் அரிதான நீரேற்று பாசுபேட்டு கனிமம் ஆகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Mg5Al12(PO4)8(OH)22·32H2O.[1][2][3] ஆகும். அடிலைடு பல்கலைக் கழகத்தைச் சார்ந்த நிலவியல் மற்றும் கனிமவியல் பேராசிரியர் ஆர்தர் ரிச்சர்டு ஆல்டர்மான் (1901-1980) இக்கனிமத்தைக் கண்டறிந்த காரணத்தால் இப்பெயர் சூட்டப்பட்டது. ஆத்திரேலியா நாட்டின் தெற்கு ஆத்திரேலியாவில் உள்ள லாப்டி மலைத் தொடரின் வடக்குப்பகுதி, பரோசா பள்ளத்தாக்கு, அங்காசுடான், மோகுல்டா கற்குடைவு (கிளெம்சு கற்குடைவு) போன்ற இடங்களில் காணப்படும் குறிப்பிட்ட ஒரு பாறை வகைகளில் இக்கனிமம் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Harrowfield I. R., Segnit E. R. and Watts J. A. 1981: Aldermanite, a New Magnesium Aluminium Phosphate. Mineralogical Magazine, 44(333), 59-62 - [1] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.mindat.org/min-104.html Mindat
- ↑ http://www.handbookofmineralogy.org/pdfs/aldermanite.pdf Handbook of Mineralogy