ஆல்பர்ட்டு I (குரங்கு)
ஆல்பர்ட்டு I (குரங்கு) (Albert I (monkey)) 1948 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று வி2-ஏவுகணை மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகின் பழமையான குரங்கு வகை பாலூட்டிகளில் ஒன்றாகும்.[1][2] அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தின் இலாசு குரூசசு நகரத்தின் வெண் மணல் ஏவுகணை தளத்திலிருந்து வி2- ஏவுகணை செலுத்தப்பட்டது.[2]
பின்னணி
தொகுஆல்பர்ட்டு I (குரங்கு)" அனுப்பும் திட்டம் பல செயல்பாட்டு தோல்விகளால் பாதிக்கப்பட்டது. ஏவுதலுக்கு முன் சுவாசக் கருவி செயலிழந்தது, மேலும் வான்குடை அமைப்பும் தோல்வியடைந்தது. ஆல்பர்ட் சுவாசப் பிரச்சனைகளால் இறந்திருக்கலாம். ஆனால் விண்கலத்தின் வான்குடை திறக்கத் தவறியதாலும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு ஆல்பர்ட்டு 1 இறந்திருக்கலாம்.[1][3] ஏவுகணை எண் 37" என நியமிக்கப்பட்ட வி-2 ஏவுகணை 39 மைல்கள் (62 கிமீ) பயணம் செய்து இடை வளிமண்டல அடுக்கு உயரத்தை அடைந்தது. ஆனால் தோல்வியடைந்த ஓரதர் காரணமாக, விண்வெளிக்கு ஏவுகணை ஏறுவதும் தோல்வியில் முடிந்தது.[1][3]
இந்த திட்டம் வெற்றிகரமான 1949 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் நாளும் தொடர்ந்தது, ஆல்பர்ட் II ஒரு துணை விமானத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் தாக்கத்தின் விளைவால் அதுவும் இறந்தது.[2][4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Beischer, Dietrich E. Fregly, Alfred R. (1962) ANIMALS AND MAN IN SPACE. A CHRONOLOGY AND ANNOTATED BIBLIOGRAPHY THROUGH THE YEAR 1960, NAVAL SCHOOL OF AVIATION MEDICINE PENSACOLA FL.
- ↑ 2.0 2.1 2.2 "History of Research in Space Biology and Biodynamics, - PART I - THE BEGINNINGS OF RESEARCH IN SPACE BIOLOGY AT THE AIR FORCE MISSILE DEVELOPMENT CENTER, 1946-1952". history.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
- ↑ 3.0 3.1 Teitel, Amy Shira (2014-06-21). "The Alberts, Spaceflight's Unsung Heroes". Popular Science (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.
- ↑ "Animals in Space". history.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2023-06-14.