ஆல்பர்ட் ரசல் நிக்கோல்ஸ்

அயர்லாந்து விலங்கியலார்

ஆல்பர்ட் ரசல் நிக்கோல்சு (Albert Russell Nichols, 1859-1933) ஒரு ஆங்கிலேய அருங்காட்சியகக் கண்காணிப்பாளரும் விலங்கியல் நிபுணரும் ஆவார். இவர் அதிகமாக அயர்லாந்தில் பணிபுரிந்துள்ளார்.

நிக்கோல்சு கேம்பிரிட்ஜ் கிளேர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார். 1882 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அளவில் கணிதத்தில் 16-வது சிறப்பிடத்தினைப் பிடித்தார்.[1] நிக்கோல்சு 1883இல் இங்கிலாந்திலிருந்து டப்லினுக்கு சென்று, அங்குள்ள அறிவியல் கலை அருங்காட்சியகத்தில் (இப்போது அயர்லாந்தின் தேசிய அருங்காட்சியகம்) உதவியாளராகச் சேர்ந்தார். இவர் தனது நாற்பத்தியொரு ஆண்டு சேவையினை விலங்கியலில் முதுகெலும்பற்ற விலங்குகளை வகைப்படுத்துவதில் செலவிட்டார். இவர் இயற்கை வரலாற்றுப் பிரிவின் காப்பாளரானார். நிக்கோல்சு, ராயல் ஐரிஷ் கழகத்தின் அனுசரணையுடன் ஹடனுடன் 1886 ஆம் ஆண்டு லார்ட் பாண்டன் அகழ்வாராய்ச்சியில் பங்கேற்றார், மேலும் லம்பே, கிளேர் தீவு, மலாஹைட் ஆகிய இடங்களில் நடைபெற்ற உயிரியல் ஆய்வுகளில் பங்கேற்றார்.

நிக்கோல்சு, ராயல் ஐரிஷ் கழகத்தால் வழங்கப்பட்ட முட்தோலிகள், கடல் வாழ் மெல்லுடலிகள் மற்றும் அயர்லாந்தின் பறவைகளின் பட்டியல்களைத் தொகுக்கவும் திருத்தவும் செய்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Nichols, Albert Russell (NCLS878AR)". A Cambridge Alumni Database. University of Cambridge.