ஆல்பா-7
ஆல்பா-7 (ஏ7) என்பது சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நகர்பேசியில் பொருத்தப்படும் ஒரு எண்முறை ஒளிப்படக்கருவி ஆகும். இது கண்ணாடியற்ற ஒரு ஒளிப்படக்கருவியாகும். இதன் படத்துணக்குத் திறன் 36.4 மெகாப்படப்புள்ளிகள் கொண்டதாகும்.[1]
இதுவே உலகிலேயே சிறிய மற்றும் மெல்லிய சட்டம் முழுதும் இடமாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஆடிகள் கொண்ட ஒளிப்படக்கருவியாகும். இதில் ஒலி அதிர்வெண் ஏற்கும் விதமாக பையான்ஸ் எக்ஸ் செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது உயர் துல்லியம் மற்றும் நொடிக்கு அறுவது படச்சட்ட காணொளி பதிப்பிக்கும் திறன் கொண்டவை. ஒய்-ஃபை, புலமருகில் தொடர்பியல் மற்றும் தூசி, ஈரத்தன்மை எதிர்ப்பு போன்ற பண்புகள் கொண்டவையாகும்.[2]
9 பொத்தான்களும், 46 செயலாக்கங்களும் கொண்டதாக அமைப்பட்டிருக்கிறது.