ஆல்பின் எதிர்பலியாட்டம்
ஆல்பின் எதிர்பலியாட்டம் (Albin Countergambit) என்ற சதுரங்கத் திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கி விளையாடப்படுகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.d4 d5 2.c4 e5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | டி08–டி09 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | சால்வியொலி எதிர்த்து கேவல்லோட்டி, மிலன் 1881 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | அடோல்ப் ஆல்பின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | ராணியின் பலியாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
பின்னர் வழக்கமாகத் தொடர்கின்ற நகர்வு விளையாடப்படுகிறது.
ராணியின் பலியாட்ட திறப்புக்கு எதிராக விளையாடப்படும் பொதுவான தற்காப்பு ஆட்டம் இதுவல்ல. பலிகொடுக்கப்பட்ட சிப்பாயை பரிமாறிக் கொண்ட பிறகு கருப்புக்கு வெள்ளைப் படையின் மையப்பகுதியை பிளக்க உதவும் d4 சதுரத்தைப் பிடித்துக் கொள்ளும் வாய்ப்பும், தாக்குதலை நிகழ்த்தும் சில வாய்ப்புகளும் கிடைக்கின்றன. பெரும்பாலும் வெள்ளை தேவையான நேரத்தில் அதன் சிப்பாயைப் பதிலுக்கு கொடுத்து அமைப்பு அனுகூலத்தை ஈட்டக் காத்திருக்கிறது.
சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக்களஞ்சியத்தில் ஆல்பின் எதிர்பலியாட்ட்த் திறப்புக்கு டி08 மற்றும் டி09 குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
வரலாறு
தொகு1981 ஆம் ஆண்டில் மிலனில் நடைபெற்ற போட்டியில் இத்திறப்பு கேவல்லோட்டியால் சால்வியோலியை எதிர்த்து விளையாடப்பட்டாலும் அடோல்ப் ஆல்பின் பெயரையே இத்திறப்பு பெற்றுள்ளது. 1893 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடைபெற்ற போட்டியொன்றில் இமானுவல் லேசுக்கரை எதிர்த்து விளையாடும் போது இவர் இத்திறப்பை பயன்படுத்தி விளையாடினார். சதுரங்க மாசுட்டர்கள் நிலையில் இத்திறப்பு அடிக்கடி விளையாடப்படாவிட்டாலும் உருசியன் கிராண்டு மாசுட்டர் அலெக்சாண்டர் மோரோசெவிச்சு சமீபத்தில் இத்திறப்பை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளார்[1].
பிரதான நகர்வு வரிசை
தொகுa | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
4. Nf3 Nc6 என்ற நகர்வுகளுடன் பிரதான வரிசை தொடர்கிறது.
(4...c5 நகர்வை கருப்பு விளையாடினால் 5.e3 என வெள்ளை விளையாட வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் கருப்பின் அமைச்சரால் வெள்ளை ராசாவுக்கு எச்சரிக்கை கொடுக்க வழியேதுமில்லை. மற்றும் வெள்ளைக்கு இருக்கும் நகர்வு வாய்ப்புகள் 5.a3, 5.Nbd2, மற்றும் 5.g3 ஆகியவைகளாகும். ஒருவேளை வெள்ளை உறுதியாக முன்னேற்றமான ஆட்டத்திற்கு முயற்சிக்க விரும்பினால் 5.g3 நகர்வு மூலம் Bg2 மற்றும் Nbd2. நகர்வுகள் விளையாடி விலாமடிப்புத்தேரை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்குப் பதிலாக கருப்பு பெரும்பாலும் இராணியின் பக்கத்தில் கோட்டை கட்டிக் கொள்வது வழக்கம். இவ்வகையான ஒரு குறிப்பிட்ட வரிசை தொடர்ச்சியாக 5.g3 Be6 6.Nbd2 Qd7 7.Bg2 0-0-0 8.0-0 Bh3 என்ற நகர்வுகளைக் குறிப்பிடலாம்.
மாறுபாடுகள்
தொகுலேசுக்கர் பொறி
தொகுd4 இல் நிற்கும் கருப்பு சிப்பாய் பார்ப்பதற்கு சாதாரண சிப்பாயைப் போல தோன்றினாலும் அது கருப்புக்கு மிகவும் வலிமையைக் கொடுக்கும் சிப்பாயாகும். கவனக்குறைவாக வெள்ளை 4.e3 நகர்வைச் செய்து விட்டாரெனில் இவ்விடத்தில் லெசுக்கர் பொறியை வைக்க கருப்புக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். வெள்ளையின் 4.e3 நகர்வுக்கு பதிலாக கருப்பின் நகர்வுகள் 4...Bb4+ 5.Bd2 dxe3 6.Bxb4?? இப்படியிருக்கும். வெள்ளையின் ஆறாவது 6.Bxb4?? நகர்வு ஒரு மட்த்தனமான பிசகு ஆகும். கருப்பு உடனடியாக 6...exf2+ 7.Ke2 fxg1=N+! என்று நகர்வுகளைத் தொடர்ந்து வெற்றி பெற்றுவிடும். லெசுக்கர் பொறி முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டியது எனினும் நடைமுறையில் மிகவும் அரிதாக நிகழக்கூடியது ஆகும்.
சிபாசுக்கி மாறுபாடு
தொகு4. e4 என்ற நான்காவது நகர்வை வெள்ளை விளையாடுவது சிபாசுக்கி மாறுபாடு எனப்படுகிறது. இந்நகர்வுக்கு பதிலாக கருப்பு உடனடியாக 4....dxe3e.p. வழிமறித்துப் பிடித்தல் நகர்வை.செய்யவேண்டும் மாறாக 4...Bb4+ என நகர்த்தி விளையாடினால் வெள்ளை 5.Bd2 எனப் பதில் கொடுக்கும் கருப்பால் 4....dxe3e.p. நகர்வை செய்ய முடியாமல் போகும். ஏனெனில் இந்நகர்வு உடனடியாக செய்யப்பட வேண்டிய நகர்வு என்பது சதுரங்க விதிமுறைகளில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Albin Counter-Gambit". Chess.com. April 28, 2011.
உசாத்துணை
தொகு- Luc Henris (2013). The Complete Albin Counter-Gambit. Jean-Louis Marchand Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-9600247-4-5.
- Ward, Chris (2002). Unusual Queen's Gambit Declined. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85744-218-0.
- Hooper, David; Whyld, Kenneth (1992). The Oxford Companion to Chess (2nd ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280049-3.
- Adolf Albin and the Genesis of the Albin Counter Gambit Part I, O. G. Urcan, chesscafe.com
- Adolf Albin and the Genesis of the Albin Counter Gambit Part II, O. G. Urcan, chesscafe.com