ஆல்பிரெடு ஆரிசன் ஜாய்

ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் (Alfred Harrison Joy) (செப்டம்பர் 23, 1882, கிரீன்வில்லி, இல்லினாயிசு- ஏப்பிரல் 18, 1973, பசதேனா, கலிபோர்னியா) ஓர் அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர் உடுக்கணத் தொலைவு, விண்மீன்களின் ஆர இயக்கம், மாறியல்பு விண்மீன்கள் ஆகிய ஆய்வுக்குப் பெயர்பெற்றவர்

இளமை வாழ்க்கைதொகு

இவர் இல்லினாயிசில் உள்ள கிரீன்வில்லியில் பிறந்தார். இவரது தந்தையார் புகழ்மிக்க கிரீன்வில்லியின் துணி வணிகரும் ஒருமுறை நகரத் தந்தையாகவும் இருந்த எஃப்.பி. ஜாய் ஆவார்.[1]இவர் 1903 இல் கிரீன்வில்லி கல்லூரியில் தன் கலை இளவல் பட்டத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டு ஒபெர்லின் கல்லூரியில் தன் கலை முதுவர் பட்டம் பெற்றார்.[2]

வாழ்க்கைப்பணிதொகு

பட்டம்பெற்றதும், இவர் பீரட்டு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் சிரியப் புரோட்டசுடண்ட் கல்லூரியில் வானியல் பேராசிரியராகவும் வான்காணக இயக்குநராகவும் பணிபுரிந்தார். எனினும், இவர் முதல் உலகப் போரால் கட்டாயமாக அமெரிக்காவுக்குத் திரும்ப நேர்ந்தது.

அமெரிக்காவில் இவர் மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் 1915 முதல் 1952 வரை பணியாற்றினார். அங்கு இவரும் உடனிருந்தோரும் 5000 விண்மீன்களின் கதிர்நிரல் வகையையும் தனிப்பருமையையும் அவற்றின் தொலைவுகளையும் மதிப்பிட்டு உறுதிப்படுத்தினர். ஜாய் மேலும் T-தவுரி வகைமை விண்மீனைக் கண்டுபிடித்தார். இவர் விண்மீன்களின் கதிர்நிரல் கோடுகளின் டாப்பிளர் பெயர்ச்சியையும் அளந்து அவற்றின் ஆர விரைவுகளைக் கண்டறிந்தார். அதன்வழி அவற்றின் தனிப்பருமைகளையும் பொருண்மைகளையும் வட்டணைக் கூறுகளையும் கணித்தார். இவர் 1950 இல் புரூசு பதக்கம் பெற்றார்.

இவர் 1931 இலும் 1939 இலும் பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் திகழ்ந்தார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு