ஆல் கொண்ட மால் கோயில்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில்

மாலகோயில் அல்லது ஆல் கொண்ட மால் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் இராமசந்திராபுரம் - இலுப்பநகரம் ஆகிய ஊருக்கு அருகில் உள்ள ஒரு கண்ணன் கோயிலாகும்.

உடுமலை வட்டாரத்தில் பொங்கலன்று போடப்படும் கன்றுகுட்டியானது மாலகோயிலுக்கு சொந்தம் என்று கருதுகின்றனர். அந்தக் கன்றுக் குட்டியை வளர்த்து ஒரு ஆண்டோ அல்லது இரண்டு ஆண்டோ கழித்து கோயிலுக்கு கொண்டுவந்து விட்டுவிடுவர். மேலும் இந்த காளைகளை கோயிலுக்கு கொண்டுவந்து விடுவதற்கு முன்பு அதன் காலில் சலங்கை கட்டி அதை ஆடப்பழக்கும் வழக்கம் இருந்தது. கோயிலுக்கு காணிக்கையாக வரும் மாடுகளை பொங்கல் விழா முடிந்த பின்னர் ஏலம் விடுவதுண்டு.[1]

தொன்மம் தொகு

காடாக இருந்த இப்பகுதியில் பசுமாடு ஒன்று தினமும் புற்று ஒன்றில் பாலைச் சொரிந்துவந்ததாம். மாட்டின் உரிமையாளர் கோபத்தில் மாட்டை விரட்டி புற்றை இடித்த பொழுது புற்றுக்குள் இருந்த திருமாலுக்கு அடிபட்டு குருதி வெளிப்பட்டதாம். இதைக் கண்டு பயந்த மக்கள் தங்கள் தெரியாமல் செய்த தவறை மன்னிகவேண்டினர். அவர்களை திருமாள் ஆட்கொண்டார். அதன்பிறகு அந்த இடத்தில் மக்கள் கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். என்பது கோயில் குறித்த செவிவழி செய்தியாகும்.[1]

விழா தொகு

இக்கோயிலில், மாட்டுப் பொங்கல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பெரும் விமரிசையாக `மாலாகோயில் திருவிழா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. இது மால் வழிபாட்டோடு தொடர்புடைய ஆயிரம் ஆண்டுகால விழாவாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.[2]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 அந்நிக்கு கன்னுக்குட்டி போட்டா சாமிக்கு சொந்தமாயிடும், கட்டுரை, இரா மணிகண்டன், பக்கம் 40- 44 குமுதம் (இதழ்) பொங்கல் சிறப்பிதழ் 13 சனவரி 2003,
  2. கால்நடைகளைக் காக்கும் மால் வழிபாடு!, இளங்கோ கிருஷ்ணன், nermai-endrum.com பார்த்த நாள் 2021 பெப்ரவரி 4 [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_கொண்ட_மால்_கோயில்&oldid=3392694" இலிருந்து மீள்விக்கப்பட்டது