ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

விருத்தம் என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். இந்த நூலிலுள்ள விருத்தங்கள் கட்டளைக்கலித்துறை விருத்தங்கள்.

ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்னும் இந்த நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.

காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.

ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.

இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.

நூல் அமைதி
இந்த நூலில் 11 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.
சண்பை என்னும் பெயர்
”தண்டலைக் குண்டகழிச் சண்பையர்” என இந்த நூல் அவ்வூர் இறைவனைக் குறிப்பிடுவதிலிருந்து கோயிலின் தலவிருட்சம் சண்பகம் என்பதும், அதனால் இவ்வூருக்குச் ‘சண்பை’ என்னும் பெயர் உண்டாயிற்று என்பதும் தெரியவருகிறது. இங்குள்ள சிவனைக் கண்ணன் பூசித்த மலர் சண்பை ஆதலால் சண்பை என்னும் பெயர் உண்டாயிற்று என்பது புராணம்.

காலம் கணித்த கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005