ஆவடி தொடர்வண்டி நிலையம்

2008 ஆண்டு தொடரியக வெளியீட்டில், அவடி நிலையத்தை சென்னை மத்திய தொடர்வண்டி நிலைத்திற்கான துணைக்கோள் முனையமாக திட்டமிடப்பட்டுள்ளது. [2]

ஆவடி
பொது தகவல்கள்
உரிமம்தொடரியக அமைச்சகம், இந்திய தொடரியகம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்தென்னக தொடரியம் (இந்தியா)
பயணிகள்
பயணிகள் 2013நாளொன்றுக்கு 40,000[1]
அவடி தொடருந்து நிலையம் சென்னை புறநகர் தொடர்வண்டி அமைப்பின் சென்னை மத்திய-அரக்கோணம் பிரிவின் முதன்மை தொடர்வண்டி நிலையமாகும். இது அவடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது அவடியில் திருமலைராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளது.  

வரலாறு

தொகு

29 நவம்பர் 1979 அன்று முதல் வழிதடம், சென்னை மத்திய-திருவள்ளுர் பிரிவு மின்மயமாக்கப்பட்டது. ஆவடியிலுள்ள் பன்மின்னலகு(ஈ.எம்.யூ) பெட்டி பட்டறை தடங்களும் 1 பிப்ரவரி 1980 அன்று மின்மயமாக்கப்பட்டது. இந்நிலையத்தின் மீதமுள்ள வழிதடங்களும் 2 அக்டோபர் 1986 அன்று, வில்லிவாக்கம்-ஆவடி பிரிவுடன் மின்மயமாக்கப்பட்டது [3]

இடுவமைப்பு

தொகு

இந்நிலையம் இரண்டு வளைவுத்தடங்கள் உட்பட மொத்தம் 6 வழிதடங்களைக் கொண்டுள்ளது. நடைமேடைகளுக்கிடையே நடைப்பாலங்கள் உள்ளன.

2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த நிலையம் ஒரு நாளில் ஏறத்தாழ 40,000 பயணிகளைக் கையாளுகிறது. [1]

ஆவடி வடக்கு மற்றும் மேற்கு வழிதடத்தின் பன்மின்னலகு(EMU) மற்றும் முதன்னிலை பன்மின்னலகு(MEMU) சீர் பட்டறையின் முதன்மை மையமாக உள்ளது. மேலும் கேரளாவின் முதன்னிலை பன்மின்னலகு சேவைகளையும் வழங்குகிறது.

  1. 1.0 1.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630104528/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. பார்த்த நாள்: 28 Apr 2013. 
  2. "Plans to develop Avadi or Ambattur railway station". The Times of India (Chennai: The Times Group). 16 November 2008 இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104005947/http://articles.timesofindia.indiatimes.com/2008-11-16/chennai/27917600_1_railway-station-southern-railway-railway-board. பார்த்த நாள்: 23 Aug 2012. 
  3. "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி_தொடர்வண்டி_நிலையம்&oldid=3233309" இலிருந்து மீள்விக்கப்பட்டது