ஆஷா சுரேஷ் நாயர்
ஆஷா சுரேஷ் நாயர், சிறு வயதிலிருந்தே மலையாளக் கோயில்களில், கேரள பாரம்பரிய உடை அணிந்து, கைகளில் இடக்கை ஏந்தி, கருவறை வாசல் படியில் நின்று சோபன சங்கீதம் பாடல்களை பாடிக்கொண்டே இடக்கை கருவியை இசைப்பவர். கேரளாவின் திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த ஆஷாவின் தந்தை சுரேஷ் நாயர் வணிகக் கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஆஷா ஏழு வயதிலிருந்த் சோபன சங்கீதம் மேதை பி. நந்த குமாரிடம் பயிற்சி பெற்றார்.
அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத பயிற்சி மூலம் ஆஷா சங்கீத சோபனக் கலையில் தேர்ச்சி பெற்றார். இவர் பல ஆண்டுகளாக கோயில்களில் கையால் இடக்கை தோலிசைக் கருவியை இசைத்துக்கொண்டே சோபன சங்கீதம் பாடி வருகிறார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இவர் மெய்நிகர் பாராயணம் தான் அவரை முக்கியத்துவம் பெறச் செய்தது. கோவிட்-19 பெருந்தொற்று முழுஅடைப்பின் போது இவர் 200 மெய்நிகர் தளங்களில் சங்கீத சோபனம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இரிஞ்சாலக்குடாவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில்[1] நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் ஆஷா, கோவிட் தொற்று பூட்டுதல் நீக்கப்பட்டதில் இருந்து பல கோயில்களிடமிருந்து சங்கீதம் சோபனம் நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்ததாக கூறுகிறார்.
அவர் சமீபத்தில் தனது தந்தை சுரேஷ் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு குரல் கொடுக்கும் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டார்.[2] திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்ஞாலகுடா அருகில் உள்ள கூடல்மாணிக்கம் கோயில் பிரதான தெய்வமான சங்கமேஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனை பாடல்கள் இந்த ஆல்பத்தில் உள்ளது. இவருக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் 2019ல் கலா திலகம் விருது வழங்கி கௌரவித்தது.[3]