ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்

ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் (ஆங்கில மொழி: Australian Antarctic Territory, AAT) என்பது அண்டார்க்டிக்காவில் ஆஸ்திரேலியாவினால் உரிமை கோரப்பட்ட பிரதேசம் ஆகும். இதுவே அக்கண்டத்தில் நாடொன்றினால் உரிமை கோரப்பட்ட மிகப் பெரிய பிரதேசம் ஆகும்.

ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்
கொடி of ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலத்தின்
கொடி
அண்டார்க்டிக்கின் ஆஸ்திரேலியப் பகுதிகள்
அண்டார்க்டிக்கின் ஆஸ்திரேலியப் பகுதிகள்
பரப்பு
• மொத்தம்
5,896,500 km2 (2,276,700 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
1,000க்கும் குறைவு
அழைப்புக்குறி672
டேவிஸ் நிலையம்

இது தென் அகலாங்கு 60°க்கு தெற்காகவும், கிழக்கு நெட்டாங்குகள் 44°38' க்கும் 160° க்கும் இடையில் அமைந்துள்ள அனைத்துத் தீவுகளையும் பிரதேசங்களையும் அடக்கியுள்ளது. இப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பிரிக்கும் அடேலி நிலம் ஆஸ்திரேலியப் பிரதேசத்துக்குச் சொந்தமானதல்ல. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 கிமீ² ஆகும்[1]. இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. ஆஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரிவு மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது. மோசன், டேவிஸ், கேசி ஆகிய மூன்று நிரந்தர ஆய்வு மையங்கள் இங்குள்ளன.

உபபிரிவுகள் தொகு

இப்பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்கு வரை ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

இல. மாவட்டம் பரப்பு (கிமீ²) மேற்கு எல்லை கிழக்கு எல்லை
1 எண்டர்பை நிலம் 044°38' E 056°25' E
2 கெம்ப் நிலம் 056°25' E 059°34' E
3 மாக் ராபர்ட்சன் நிலம் 059°34' E 072°35' E
4 இளவரசி எலிசபெத் நிலம் 072°35' E 087°43' E
5 இரண்டாம் கைசர் வில்ஹெல்ம் நிலம் 087°43' E 091°54' E
6 அரசி மேரி நிலம் 091°54' E 100°30' E
7 வில்க்ஸ் நிலம் 2,600,000 100°30' E 136°11' E
8 ஐந்தாம் ஜோர்ஜ் நிலம் 142°02' E 153°45' E
9 ஓட்ஸ் நிலம் 153°45' E 160°00' E
 
1959 இல் வில்க்ஸ் அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டதையொட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் உறை

வரலாறு தொகு

1841, ஜனவரி 9 இல் விக்டோரியா நிலம் முதன் முதலில் பிரித்தானியாவால் உரிமை கோரப்பட்டாது. பின்னர் 1930 இல் எண்டர்பை நிலத்தை பிரித்தானியா கோரியது. 1933 இல் 60° தெற்கே மற்றும் 160 கி - 45 கி பிரதேசம் பிரித்தானீய அரச ஆணையின் படி ஆஸ்திரேலியாவுக்குக் கொடுக்கப்பட்டது. 1947 இல் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தை பிரித்தானியா ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. 1954 பெப்ரவரி 13[2] இல் மோசன் நிலையம் என்ற முதலாவது ஆஸ்திரேலிய ஆய்வு நிலையம் அண்டார்க்டிக்காவில் அமைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் இந்த நிலங்களுக்கான உரிமை கோரலை ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன[3].

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு