அடேலி நிலம்

அடேலி நிலம் (French: Terre Adélie) என்பது அண்டார்ட்டிகாக் கண்டத்தில் பிரஞ்சு ஆளுகையின் கீழ் உள்ள உரிமை கோரப்பட்ட ஒரு பிரதேசம் ஆகும். இது கடலோரப்பகுதிவரை நீண்டு தெற்குப் பெருங்கடலின் கடற்கரையுடன் இணைந்து தென்துருவம் செல்லும் அனைத்து உள்நாட்டு வழிகளையும் கொண்டது. ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பிரிப்பது அடேலி நிலமாகும் இந்தப் பிரதேசத்தை பிரெஞ்சு தெற்கு அண்டார்டிக் பகுதியில் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக பிரான்சு உரிமை கோரினாலும் பெரும்பாலான நாடுகள் இதனை ஏற்கவில்லை.

அடேலி நிலம்
Terre Adélie
கொடி of அடேலி நிலம்
கொடி
குறிக்கோள்: "Liberté, égalité, fraternité"
நாட்டுப்பண்: La Marseillaise
அடேலி நிலம்அமைவிடம்
ஆட்சி மொழி(கள்)French
அரசாங்கம்
• President
Emmanuel Macron
• Administrator
Cécile Pozzo di Borgo[1]
• Head of District
François Grosvalet[2]
French overseas territory
• Coastline discovered
1840
• Claimed by France
1924
பரப்பு
• மொத்தம்
432,000 km2 (167,000 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
c. 33 (winter)
< 80 (summer)
நாணயம்ஐரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+10
அழைப்புக்குறி+262 262 00 2
இணையக் குறி.tf

புவியியல்

தொகு

அடேலி நிலம் 136 ஆவது கிழக்குத் தீர்க்கக்கோட்டுக்கும் 142 ஆவது கிழக்குத் தீர்க்கக்கோட்டுக்கும் இடையே 350 கி.மீ. வரை பரவியுள்ளது. இதன் கடற்கரைப் பகுதியின் நீளம் 350 கி. மீ. இதன் உள்நாட்டுப்பகுதி ஒரு வட்டத்தின் பகுதிபோல 2.600 கி.மீ வரை தென் துருவத்தை நோக்கி விரிவடைகிறது. அடேலி நிலம் தனது எல்லைகளை ஆஸ்திரேலிய அண்டார்டிகா பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும் முறையே மேற்கில் கிளாரி நிலத்துடனும் (வில்லெஸ் நிலத்தின் ஒரு பகுதி) கிழக்கில் ஜியார்ஜ் வி நிலத்துடனும் பகிர்ந்துகொள்கிறது. இப்பகுதியின் முழுப்பரப்பும் 432,000 ச.கி. மீட்டருக்குப் பனிப்பாறைகள் கொண்டதாகும்.

வரலாறு

தொகு

அடேலி நிலத்தின் கடற்கரை 1840 ஆம் ஆண்டு பிரான்சுநாட்டைச் சேர்ந்த நாடுகாண் ஆய்வாளர் ஜூல்ஸ் டுமாண் டி உர்வில்லே கண்டறிந்தார். தனது மனைவி அடெலெ நினைவாக இதற்கு அப்பெயரைச் சூட்டினார்.[3] இதுவே பிரான்சு அண்டார்டிகா பகுதியில் இந்நிலத்தின் உரிமை கோர அடிப்படைக் காரணமாகும்.

ஆய்வு நிலையங்கள்

தொகு

டுமாண்ட் டி ஊர்வில்லே ஆய்வுத்தளம்

தொகு

கி.பி. 1956, ஜனவரி 12-லிருந்து இத்தளத்தில் சுமார் 140 பேர் வரை பிரான்சு நாட்டு ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்கின்றனர். குளிர் காலத்தில் சுமார் 33 பேரும் ஆண்டார்ட்டிகாவின் கோடைக்காலத்தில் சுமார் 78 பேரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

போர்ட் மார்ட்டின்

தொகு

போர்ட் மார்ட்டின் என்ற முதல் பிரான்சின் ஆய்வுத்தளம் 1950, ஏப்ரல் 9ஆம் நாள் கட்டப்பட்டது. 66°49′04″S 141°23′39″E / 66.81778°S 141.39417°E / -66.81778; 141.39417, ஆனால் 1952,ஜனவரி 22-23 ஆம் நாள் இரவு ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணமாக அழிந்துவிட்டது. இந்த ஆய்வுத்தளத்தில் 1950-51 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் 11 பேரும், 1951-52 ஆம் ஆண்டில் 17 பேரும் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.[4]

சார்காட் தளம்

தொகு

சார்காட் ஆய்வுதளம் (69°22′30″S 139°01′00″E / 69.375°S 139.016667°E / -69.375; 139.016667) அண்டார்டிகா பனி ஏடுகளில் 320 கி. மீ களில் அமைந்துள்ள, உள்நாட்டு அடிப்படையிலான பிரான்சின் ஓர் ஆய்வுத்தளமாகும். இது கடல்பகுதி மற்றும் டுமாண்ட் டி ஊர்வில்லே ஆய்வுநிலையக் கடற்கரையிலிருந்து 2400 மீட்டர் வரி பரவியுள்ளது. from the coast and from Dumont d'Urville Station, at an elevation of about 2,400 மீட்டர்கள் (7,900 அடி). இந்த ஆய்வு நிலையம் ழான் பாப்திஸ்தே சார்காட் என்பவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பன்னாட்டுப் புவி இயற்பியல் ஆண்டான 1957-58 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 1957 இல் செயல்படுத்தப்பட்ட இந்நிலையத்தில் 1957 முதல் 1960 ஆம் ஆண்டு வரை மூன்று நபர்கள் மட்டுமே தனியாகத் தங்கி ஆய்வுகளை நடத்தினர். The station, built for the International Geophysical Year of

இந்நிலையத்தின் அடித்தளமானது 24 சதுர மீட்டரில் முழுவதும் அரை உருளை வடிவ உலோகத் தகடுகளால் அமைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய பாறைவடிவத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பானது கடும் பனி காரணமாக ஏற்படும் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்கும்படி அமைந்தது. கிடைமட்ட வடிவில் அமைக்கப்பட்ட சாளர அமைப்பு, அறிவியல் அளவீட்டுக் கருவிகள் வைத்திருக்கும் அறையுடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டது. செங்குத்தாகக் காற்று வீசும்போது இந்த அமைப்பானது சில மீட்டருக்கு மேலே திறந்து பனியை அகற்றி காற்று நுழைய உதவுமாறு அமைக்கப்பட்டிருந்தது.[5]

கேப் புருட் ஹோம் கேம்ப்

தொகு

கேப் புருட் ஹோம் கேம்ப் என்பது இத்தாலிய- பிரஞ்சு ஆய்வுக்கூடமாகும். இது 1994 இல் திறக்கப்பட்டது. அண்டார்டிகா பணி ஏடுகளில் பெட்ரேல் தீவிலிருந்து 5 கி.மீ. இல், டுமாண்ட் டி ஊர்வில்லே ஆய்வுத்தளம் அமைந்துள்ள அடேலி நிலத்தில் இக்கூடம் உள்ளது. இங்கு அப்படியே விட்டுச்செல்லப்பட்ட, ஓட்டுநருடன் 9 நபர்களும், 150 டன் அணுகுண்டு எடையையும் தாங்கிச்செல்லக்கூடிய ஏழு டிராக்டர்கள், உள்ளிட்ட போக்குவரத்துச் சாதனங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியன இங்கிருந்து இத்தாலிய பிரெஞ்சுக் கூட்டாக அமைந்த கான்கார்டியா நிலையத்திற்கு அப்படியே எடுத்துச் செல்லப்பட்டது.[6]

புகழ்

தொகு

டுமாண்ட் டி ஊர்வில்லே ஆய்வு நிலையம் குறித்து “ மார்ச் ஆஃப் பெங்குவின்” என்ற ஆவணப்படம் 2005 இல் தயாரிக்கப்பட்டுள்ளது. .[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Official nomination". Archived from the original on 2018-11-02. பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  2. List of chefs de district
  3. Dunmore, John (2007). From Venus to Antarctica: The Life of Dumont D'Urville. Auckland: Exisle Publ. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780908988716.
  4. "Fire destroys station in Antarctica, French expedition's loss". தி டைம்ஸ். January 26, 1952. 
  5. "Base Charcot". French Wikipedia. Wikimedia. பார்க்கப்பட்ட நாள் October 7, 2018.
  6. "Cap Prud'Homme". Italiantartide. Archived from the original on மே 29, 2019. பார்க்கப்பட்ட நாள் October 7, 2018.
  7. "The Emperor's Close-Up". National Geographic's Adventure. National Geographic Society. 2007. Archived from the original on 5 June 2013. பார்க்கப்பட்ட நாள் 29 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடேலி_நிலம்&oldid=4181262" இலிருந்து மீள்விக்கப்பட்டது