ஆ. ஜெகதீசன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருப்பூந்துருத்தி முனைவர் ஆ.ஜெகதீசன் (பிறப்பு: மே 16 1972) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த நூலாசிரியருக்கான விருது பெற்றவர். கௌரா இலக்கிய மன்றத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான விருதினைப் பெற்றவர். இவர் உலக, தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான கருத்தரங்கங்களில் பங்கேற்றுள்ளார். கல்வெட்டியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். இவர் பல ஆய்வியல் நிறைஞர் மாணவர்களையும், முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் நெறிப்படுத்தி உள்ளார்.
ஆ. ஜெகதீசன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருப்பூந்துருத்தி, திருவையாறு, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | M.A., M.A (linguistics)., M.Phil., Ph.D |
வேலை |
|
பிறப்பு
தொகுதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடுப்படுகையில் பிறந்தவர்.
பணி
தொகுகல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், "தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள்", "தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள்", "சங்க இலக்கிய மதிப்பீடுகள்", "பாரதி - பாரதிதாசன் சமூகச் சிந்தனைகள்" போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
பொறுப்புகள்
தொகுமேனாள் எக்ஸ்நோரா திட்ட அலுவலர்
மேனாள் இளைஞர் மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்
மேனாள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்
மேனாள் இளைஞர் செஞ்சுருள் சங்க கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மேனாள் கல்லூரி முதல்வர் (பொ), அரசு கலைக் கல்லூரி, மாதனூர், வேலூர் மாவட்டம்.
தற்போது தமிழாய்வுத்துறை தலைவர், டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி, குளித்தலை.
பங்கேற்ற கருத்தரங்குகள்
தொகு18.02.2010 One day workshop Gender studies Bharathidasan University, Tiruchirappalli.
12.12.2011 - 15.12.2011 Youth Red cross, State level University YRC study camp, Coimbatore.
03.07.2012 - 09.07.2012 NSS orientation course, madras school of social Work, Chennai.
04.01.2013 - First Aid programme St. John ambulance, IRCS, Tamilnadu - Chennai.
23.01.2014-27.01.2014 Training camp youth Red cross Annamalai University, Chidambaram.
AIFUCTO - seminar changing Paradigms of higher education - St. Alloysius college (Autonomous), Mangalore Karnataka.
'ஆர்' அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டு கருத்தரங்கத்தில் "புறநானூற்றில் வஞ்சின மொழிகள்"
என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியுள்ளார்.
கௌரா இலக்கிய மன்றம் சார்பாக 2010ல் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ் துறை படைப்பாளிகளின் படைப்புத்திறன் பரிசுப் போட்டியில் பங்கேற்று உள்ளார்.
நூல்கள்
தொகு1.தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள்(மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது).
2. கல்வெட்டியல்
3. நாவல் இலக்கியத்தில் சு.சமுத்திரம்
4. பாரதி பாரதிதாசன் சமூகச் சிந்தனைகள்
5.சங்க இலக்கிய மதிப்பீடுகள்
6. இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்(2008ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது பெற்றது.)
7. பெண்களுக்கான சட்டங்கள் (2013ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது பெற்றது.)
8. மனித உரிமைகள்
9. பாலின சமத்துவம்
10. பத்துப்பாட்டில் பெண்கள்
11. சிந்தனையியல்
12. சித்தர் இலக்கியம்
13. இந்திய அரசியலமைப்பு
14. பெண்ணியம்