ஆ யங் (பாடகி)

தென் கொரிய பாடகி

சோ ஜா-யங் (ஆங்கிலம் :Ah Young) 1991 மே 26 அன்று பிறந்த இவர் அவரது மேடைப் பெயரான ஆ யங் என்பவரால் நன்கு அறியப்பட்டவர். இவர் ஒரு தென் கொரிய பாடகி மற்றும் நடிகை ஆவார். அதே போல் தால் சாபெட் என்ற இசைக் குழுவின் உறுப்பினராகவும் அறியப்படுகிறார்.

ஆ யங்
தாய்மொழியில் பெயர்조자영
பிறப்புCho Ja-young
மே 26, 1991 (1991-05-26) (அகவை 32)
சியோல், தென் கொரியா
மற்ற பெயர்கள்Ah Young
பணி
செயற்பாட்டுக்
காலம்
2011–present
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்கொரியன் பரப்பிசை (கே பாப்)
இசைக்கருவி(கள்)பாடுதல்
இணைந்த செயற்பாடுகள்Dal Shabet
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Jo Ja-yeong
McCune–ReischauerCho Cha-yŏng
Stage name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்A-yeong
McCune–ReischauerA-yŏng

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஆ யங் மே 26, 1991 அன்று தென் கொரியாவின் சியோலில் பிறந்தார். அவர் தொங்டுக் மகளிர் பல்கலைக்கழகத்தில் 'பொழுதுபோக்கு' என்றப் பாடத்தைப் படித்தார்.

தொழில் தொகு

2011–2012: தொழில் ஆரம்பம் தொகு

ஆ யங் 2011 ஜனவரி 3 அன்று தால் சாபெட் குழுவின் சுபா துபா திவா என்ற இசைத்தொகுப்பு வெளியானதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானார்.[1]

2011 பிப்ரவரி 28, அன்று, ஆ யங் கிரின் உயர்நிலைப் பள்ளியின் மாணவராக, கொரிய ஒலிபரப்பு அமைப்பின் ட்ரீம் ஹை என்ற திரைப்படத்தில், தால் சாபெட் குழுவுடன் ஒரு கேமியோவை உருவாக்கினார்.[2] ஆ யங் மற்றும் தால் சாபெட் பின்னர் வொண்டர்ஃபுல் ரேடியோ என்றத் திரைப்படத்தில் கோர்பி கேர்ள்ஸ் என்ற கற்பனையான பெண்கள் குழுவாக தோன்றினர்.[3] தால் சாபெட்டின் உண்மை நிகழ்ச்சிகள் ஸ்வீட் ஸ்வீட் ஸ்டோரி மற்றும் கூல் பிரண்ட்ஸ், அத்துடன் அவர்களின் யூடியூப் தொடரான சாபெட் ஆன் ஏர் ஆகியவற்றிலும் ஆ யங் பங்கேற்றார்.

2013 - தற்போது வரை: நடிப்பு & பாத்திரங்கள் தொகு

ஆ யங் தனது முதல் தனி நாடகத்தை கொரிய ஒலிபரப்பு அமைப்பின் ஆட் ஜீனியஸ் லீ டே-பேக் என்ற பாடலுக்கு நடிக்கவுள்ளதாக, 2013 ஜனவரி 9 அன்று அறிவிக்கப்பட்டது.[4] ஜி.ஆர்.சி என்ற விளம்பர நிறுவனத்தின் செயலாளரான காங் சன்-ஹை என்ற வேடத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் அவரது விசித்திரமான ஆளுமைக்காகவும், அவரது தனித்துவமான ஃபேஷன் உணர்விற்காகவும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.[5]

2013 மார்ச் 14,அன்று சியோல் ஒலிபரப்பு அமைப்பின் வரலாற்று நாடகமான ஜாங் ஓக்-ஜங், லிவிங் பை லவ் போன்றவற்றின் நடிகர் குழுவில் ஆ யங் இணைந்ததாக தெரியவந்தது.[6] அரண்மனை முழுவதும் நகைச்சுவை உணர்வைக் காண்பிப்பதில் பெயர் பெற்ற இளவரசி மியோங்கன் என்ற தொடர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தார்.

2013 மே 22, அன்று, நோ பிரீத்திங் திரைப்படத்தின் நடிகர் குழுவில் ஆ யங் சேர்க்கப்பட்டார். பிரபல பாடகியாக வேண்டும் என்று கனவு காணும் உயர்நிலைப் பள்ளி மாணவியான சே-மி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[7] ஒரு பெரிய திரைப்படத்தில் ஆ யங்கின் முதல் தனி தோற்றத்தை நோ ப்ரீத்திங் குறிக்கிறது. 2013 செப்டம்பர் 9, அன்று, ஆ யங் 58 - தி இயர் ஆஃப் தி டாக் என்றத் திரைப்படத்தில் ஜியம் ஹாங் என்றத் காபாத்திரத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டது.[8] இந்த படம் 2014 இல் வெளியிடப்பட்டது.

நவம்பர் 2013 இல், ஆ யங் தனது முதல் முன்னணி பாத்திரத்தை நேவர் தொலைக்காட்சியின் சம்டே என்ற வலை நாடகத்தில் லீ ஜி-யூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[9] ஜூன் 13, 2014 அன்று, ஆங் யங் முன்வா ஒலிபரப்பு அமைப்பின் நாடகமான டைரி ஆஃப் எ நைட் வாட்ச்மேனில் தொடர்ச்சியான பாத்திரமாக ஹாங் சோ-ஹீ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது தெரியவந்தது.[10]

நவம்பர் 2014 இல், ஆ யங் முன்வா ஒலிபரப்பு அமைப்பின் லவ் ஃப்ரீக்வென்சி 37.2 நாடகத்தில் ஜங் சன்-ஹீ என்ற கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[11] அக்டோபர் 2016 இல், சியோல் ஒலிபரப்பு அமைப்பின் எவர் கேப்-சூன் என்ற நாடகத்தில் ஆ யங் ஒரு துணை வேடத்தில் நடித்தார், இதில் கேப்-டோலின் சகாவான கிம் யங்-ரன் என்ற வேடத்தில் நடித்தார்.

ஹேப்பி பேஸ் என்டர்டெயின்மென்ட்டுடனான ஒப்பந்தம் முடிந்ததும், டிசம்பர் 2017 இல், ஆ யங் சிதுஸ்ஹெச்கியூ என்ற நிறுவனத்தில் சேர்ந்தார்.[12] இந்த அடையாள மாற்றத்துடன், தால் சாபெட்டுடனான அவரது எதிர்கால நடவடிக்கைகள் விவாதத்தில் உள்ளன.[13]

குறிப்புகள் தொகு

  1. Dal Shabet releases “Supa Dupa Diva” music video! பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். TV Report (January 3, 2011). Retrieved on September 9, 2013
  2. 달샤벳, '드림하이' 최종회서 기린예고생으로 출연. http://www.cnews.co.kr/ Retrieved on September 9, 2013.
  3. 달샤벳, '이민정 주연 영화<원더풀 라디오>에 카메오 출현!'. http://www.imaeil.com/ Retrieved on September 9, 2013.
  4. 달샤벳 아영 "'광고천재 이태백' 부족한 날 도와줘 감사"[தொடர்பிழந்த இணைப்பு]. http://enews24.interest.me பரணிடப்பட்டது 2016-11-07 at the வந்தவழி இயந்திரம் Retrieved on September 9, 2013.
  5. '광고천재 이태백' 달샤벳 아영, 통통튀는 4차원 미스공 패션 화제 பரணிடப்பட்டது 2013-09-10 at Archive.today. http://wstarnews.hankyung.com/ பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Retrieved on September 9, 2013.
  6. ["'장옥정' 아영 "태희 언니 괴롭히려니 걱정" (in கொரியன்). Archived from the original on 2013-09-12. பார்க்கப்பட்ட நாள் 2013-09-09.
  7. 달샤벳 아영, 영화 '노브레싱' 캐스팅. http://www.polinews.co.kr/ Retrieved on September 9, 2013.
  8. 달샤벳 아영, '노브레싱' 이어 '58년 개띠' 캐스팅 பரணிடப்பட்டது மார்ச்சு 1, 2016 at the வந்தவழி இயந்திரம். http://star.ohmynews.com. Retrieved on September 9, 2013.
  9. "Dal Shabet's Ah Young Leads New Web Drama "An Unfamiliar Day" - Soompi". www.soompi.com.
  10. 달샤벳 아영, MBC 새 월화드라마 '야경꾼일지' 캐스팅. Metro Seoul. Retrieved on August 5, 2014.
  11. "Dal Shabet's Ah Young Cast as Lead in New Drama "Love Frequency 37.2" - Soompi". www.soompi.com.
  12. "[공식] 달샤벳 아영, 싸이더스HQ와 전속계약…KBS 드라마로 첫 행보".
  13. "달샤벳 세리·아영·수빈, 현 소속사와 전속계약 만료(공식입장)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ_யங்_(பாடகி)&oldid=3931734" இலிருந்து மீள்விக்கப்பட்டது