இக்கின்சு அன்ட் கேச்சு உலக அஞ்சல் எழுதுபொருள் விபரப்பட்டியல்

இகின்சு அன்ட் கேசு உலக அஞ்சல் எழுதுபொருள் விபரப்பட்டியல் (Higgins & Gage World Postal Stationery Catalog) என்பது, கடைசியாக வெளியிடப்பட்டதும் உலகம் தழுவிய தகவல்களை உள்ளடக்கியதுமான அஞ்சல் எழுதுபொருள் விபரப்பட்டியல் ஆகும். இதன் தொகுதிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இற்றைப்படுத்தப்படவில்லை எனினும், இந்த விபரப்பட்டியலையும், அதில் பயன்பட்டுள்ள எண் முறைமையையும், இன்றும் அஞ்சல் எழுதுபொருள் சேகரிப்பவர்களும், அஞ்சல் எழுதுபொருள் வணிகர்களும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் விபரப்பட்டியிலில் தரப்பட்டுள்ள பொருட்களுக்கான மதிப்புகள் காலங்கடந்தவை.

19 தொகுதிகளையும் நிரப்பு தொகுதிகளையும் கொண்ட இந்த விபரப்பட்டியல் 1964க்கும் 1986க்கும் இடையில்[1] வெளியிடப்பட்டது. அலெக்சாண்டர் டி. கேசுடன் இணைந்து பணியாற்றிய எட்வார்டு ஃபிளாடுங் முந்திய தொகுதிகளுக்கு பதிப்பாசிரியராக இருந்தார்.[2][3] பிந்திய தொகுதிகளுக்கு மெல்வின் ஃபெயினர் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பாளர்

தொகு

இது தொடக்கத்தில் "இக்கின்சு அன்ட் கேசு" நிறுவனத்தினால் பதிப்பிக்கப்பட்டது. இது தற்போது கலிபோர்னியா, பசடேனாவைச் சேர்ந்த "கிளாசிக் பிலேட்டலிக்சு ஆஃப் அன்டிங்டன் பீச்" என்னும் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. "கிளாசிக் பிலேட்டலிக்சு" புதிய வெளியீடு அஞ்சல் எழுதுபொருட்களுக்கான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு வருகின்றனர்.

வீச்செல்லை

தொகு

இந்த விபரப்பட்டியலில், அஞ்சல்தலையிட்ட கடித உறைகள், அஞ்சல் அட்டைகள், கடித அட்டைகள், சுற்றுத்தாள்கள், வான்கடிதத்தாள்கள், பதிவு அஞ்சல் உறைகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

தொகுதிகள்

தொகு

இவ்விபரப்பட்டியலின் தொகுதிகள் ஆங்கில அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விபரங்கள் பின்வருமாறு:

  • தொகுதி 1 அபுதாபி - அசோரெசு
  • தொகுதி 2 பாடென் - புசயர்
  • தொகுதி 3 கமெரூன் - செக்கோசிலவாக்கியா
  • தொகுதி 4 தகோமி - டச்சு நியூ கினியா
  • தொகுதி 5 கிழக்கு ஆப்பிரிக்கா - எத்தியோப்பியா
  • தொகுதி 6 போக்லாந்துத் தீவுகள் - பஞ்சால்
  • தொகுதி 7 கபொன் - குயானா
  • தொகுதி 8 எயிட்டி - அங்கேரி
  • தொகுதி 9 ஐசுலாந்து - ஐவரி கோசுட்டு
  • தொகுதி 10 சமேய்க்கா - குவைத்
  • தொகுதி 11 லபுவான் - லக்சம்பர்க்
  • தொகுதி 12 மாக்கூ - மசுக்கட்
  • தொகுதி 13 நேட்டால் - ஆரஞ்சு ரிவர் காலனி
  • தொகுதி 14 பாக்கித்தான் - குயீசுலாந்து
  • தொகுதி 15 ரியூனியன் தீவுகள் - ரியூக்கு தீவுகள்
  • தொகுதி 16 சார் - சிரியா
  • தொகுதி 17 தகிட்டி - துருக்கு அன்ட் கைக்கோசுத் தீவுகள்
  • தொகுதி 18 உபாங்கி - உருகுவே
  • தொகுதி 19 வத்திக்கான் நகர் - சூலுலாந்து

மேற்கோள்கள்

தொகு
  1. American Philatelic Research Library catalogue search 6 April 2009 Library Home Page
  2. Ed Fladung died March 1977, Tell, American Helvetia Philatelic Society, April–May 1980, p. 76.--Date of death for Edward G. Fladung, editor of World Postal Stationery Catalog is 3 March 1980, not 1977 (information contributed by his daughter, Jill R. Hillary).
  3. Gage and Fladung jointly received the 1977 Distinguished Service Award for Valuable Contributions to the Advancement and Enrichment of Philately from the Federated Philatelic Clubs of Southern California.