இக்பால் மன்சில்

பாக்கித்தானில் உள்ள கட்டடம்

இக்பால் மன்சில் (Iqbal Manzil) என்பது இசுலாமியக் கவிஞரும் தத்துவஞானியுமான முனைவர் முகம்மது அல்லாமா இக்பால் பிறந்த இடமாகும். பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரின் மையத்தில் இம்மாளிகை அமைந்துள்ளது. [1]

இக்பால் மன்சில்

வரலாறு தொகு

இக்பால் மன்சில் 1861 ஆம் ஆண்டு அல்லாமா இக்பாலின் தாத்தா முகமது ரபீக் என்பவரால் வாங்கப்பட்டது. [2] வீடு முதலில் மிகவும் சிறியதாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வாரிசும் கட்டடத்தை சேர்த்துக் கொண்டே இருந்ததால் கட்டிடம் பெரிய அளவுக்கு வளர்ந்தது.

தந்தை நூர் முகம்மது இறந்த பிறகு, இக்பாலின் மூத்த சகோதரர் அட்டா முகமது, இக்பால் மன்சிலின் உரிமையாளராக நியமிக்கப்பட்டார். அட்டா முகமதுவின் மகன்கள் அவரது மரணத்திற்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியேறி கராச்சி மற்றும் லாகூரில் தங்கினர். [3]

அல்லாமா இக்பாலின் மகன் இயாவேத் இக்பால் [4] அக்டோபர் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இக்பால் மன்சிலில் பிறந்தார். இயாவேத்து இக்பால் தனது குழந்தைப் பருவத்தை லாகூரில் கழித்தார். ஆனால் பின்னர் மீண்டும் இக்பால் மன்சிலில் நுழையவே இல்லை. அல்லாமா இக்பாலின் மற்றொரு மகன் அஃப்தாப் இக்பால் தனது வாழ்க்கையின் சிறந்த நாட்களை கராச்சியில் வசித்து வந்தார். அல்லாமா இக்பாலுக்கு முனிரா இக்பால் என்ற மகளும் இருந்தாள்.

1986 ஆம் ஆண்டு முதல், ரியாசு உசைன் நக்வி இக்பால் மன்சிலில் காப்பாளராக இருந்து வருகிறார்.

மறுசீரமைப்புப் பணி தொகு

பாக்கித்தான் அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு இக்பால் மன்சிலை அதன் மறுசீரமைப்பிற்காக வாங்கி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது. இதனால் ஒரு கலாச்சார பாரம்பரியத்தின் தகுதிக்கு பொருத்தமாக இது இருந்தது.

அலட்சியம் தொகு

இருப்பினும், 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இக்பால் மன்சில் பாதிக்கப்பட்டது. பல தசாப்தங்கள் பழமையான கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்கள் தோன்றின, கதவுகள் சத்தமிட்டன. கட்டடம் இடிந்து விழும் நிலைக்குச் சென்றது. பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 300 இல் இருந்து சில பத்து நபர்களுக்கு சென்றது. [5] கட்டடத்தின் பின் பகுதி பாழடைந்த நிலையில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது.

புதுப்பித்தல் தொகு

சியால்கோட் மாவட்ட அரசாங்கம் இடிந்து விழும் நிலையில் இருந்த இக்பால் மன்சிலை காப்பாற்ற இதை புதுப்பித்தது. [6] சுவர்கள் சரிசெய்யப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. கூரைக்கு வர்ணம் பூசப்பட்டது. பழைய திரைச்சீலைகள் மாற்றப்பட்டு இரண்டாவது மாடியில் தரைவிரிப்பு போடப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 200 ஆக உயர்ந்தது. கட்டடத்தை புனரமைப்பதற்காக அரசாங்கம் 14 மில்லியன் ரூபாயை விடுவித்தது.

1988 ஆம் ஆண்டு முதல் சில தசாப்தங்களாக, இக்பால் மன்சிலின் கண்காணிப்பாளரான ரியாசு உசைன் நக்வி, இந்த வரலாற்றுச் சிறப்பு கட்டிடத்தை மறுசீரமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு, ஓரளவு வெற்றியடைந்து, செயல்திறனின் பெருமைக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.

இக்பால் மன்சிலின் உட்புறம் தொகு

குறிப்பாக இக்பால் மன்சிலைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சியால்கோட்டிற்கு வருகிறார்கள். கவிஞர் வாழ்ந்த மற்றும் கவிதைகள் எழுதிய இடம் அதுவே பின்னாளில் பாக்கித்தான் இயக்கத்தின் உருவாக்கத்தைத் தூண்டியது. புதுப்பிக்கப்பட்ட பிறகு, இக்பால் மன்சில் ஒரு நூலகம் மற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மூன்று மாடிகளில் பரந்து விரிந்திருக்கும் மாளிகையின் அறைகள் வழியாக ஒரு வழிகாட்டுதல் சுற்றுப்பயணத்தைக் நூலகம் கொண்டுள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் அல்லாமா இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய தளவாடங்கள் மற்றும் பல பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அல்லாமா இக்பால் அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் அகில இந்திய முசுலிம் லீக்கின் தலைவர்களுடன் இருக்கும் பல அரிய படங்கள் கட்டடத்தின் சுவர்களை அலங்கரிக்கின்றன. இவர்களில் பலர் அல்லாமா இக்பாலின் கையெழுத்தை வைத்துள்ளனர். இக்பால் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கவிதைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவர் பயன்படுத்திய பேனா மற்றும் மை பாத்திரமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நூலகம் தொகு

இக்பால் மன்சிலில் உள்ள நூலகத்தில் 4000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2000 புத்தகங்கள் இக்பால் பற்றியவையாகும். இவை அனைத்தும் பார்வையாளர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன. [7] பார்வையாளர்கள் நூலகத்தில் இலவசமாக அமர்ந்து தங்கள் ஓய்வு நேரத்தில் புலமைப் படைப்புகளைப் படிக்கலாம். இக்பாலின் படைப்புகளில் 5 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற நூலகம் வசதி செய்துள்ளது. [8] பஞ்சாப் அரசு இக்பால் மன்சிலில் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளது. இக்பால் மற்றும் அவரது படைப்புகள் பற்றிய ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கு இம்மையம் உதவும். [9] திட்டத்திற்கு அனுமதி கிடைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவில்லை. [10]

பார்வையாளர்கள் தொகு

புதுப்பிக்கப்பட்டதிலிருந்து, இக்பால் மன்சில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டு களிக்க பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. பாக்கித்தானுக்கான தசகிசுத்தான் தூதர் செராலி எசு இயோனோவ் மற்றும் சப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சப்பானிய பிரதிநிதிகள் போன்றவர்கள் சில குறிப்பிடத்தக்க பார்வையாளர்களில் அடங்குவர். . [11] ஊல்வா பூரியின் பாரம்பரிய காலை உணவை சப்பானிய பிரதிநிதிகள் உண்டு மகிழ்ந்தனர். [12]

மேற்கோள்கள் தொகு

  1. Iqbal Manzil renovated - Dawn Pakistan
  2. ":::Iqbal Manzil:::". iqbalmanzil.com. Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  3. ":::Iqbal Manzil:::". iqbalmanzil.com. Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  4. "Speakers pay tributes to Javed Iqbal". The Nation. பார்க்கப்பட்ட நாள் 2015-10-29.
  5. "Iqbal Manzil renovated". பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  6. "Iqbal Manzil renovated". பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  7. ":::Iqbal Manzil:::". iqbalmanzil.com. Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  8. ":::Iqbal Manzil:::". iqbalmanzil.com. Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  9. "Iqbal Manzil renovated". பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  10. "Iqbal Manzil finally gets a face lift - The Express Tribune". பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  11. "News". www.tajikembassy.pk. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
  12. Correspondent, The Newspaper's. "Japanese team visits Iqbal Manzil". பார்க்கப்பட்ட நாள் 2015-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_மன்சில்&oldid=3611535" இலிருந்து மீள்விக்கப்பட்டது