இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்
இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னர் அருங்காட்சியகம் (Isabella Stewart Gardner Museum) என்பது அமெரிக்காவின், பாஸ்டனில் உள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும், இது ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க கலைகளின் குறிப்பிடத்தக்க கலைப் பொருட்களைக் கொண்டுள்ளது . இதன் சேகரிப்பில் ஓவியங்கள், சிற்பம், திரைச்சீலைகள், அலங்காரக் கலைப் பொருட்கள் போன்றவை உள்ளன.
முற்றத்தில் இருந்து தோற்றம் | |||||||||||||||
முன்னாள் பெயர் | ஃபென்வே கோர்ட் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நிறுவப்பட்டது | 1903 | ||||||||||||||
அமைவிடம் | 25 எவன்ஸ் வே பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் 02115 | ||||||||||||||
ஆள்கூற்று | 42°20′19″N 71°5′56″W / 42.33861°N 71.09889°W | ||||||||||||||
வகை | ஓவியக் காட்சியகம் | ||||||||||||||
அங்கீகாரம் | அமெரிக்கன் அலையன்ஸ் ஆஃப் மியூசியம்ஸ் | ||||||||||||||
நிறுவியவர் | இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் | ||||||||||||||
இயக்குனர் | பெக்கி ஃபோகல்மேன் | ||||||||||||||
பொது போக்குவரத்து அணுகல் | Lua பிழை: expandTemplate: template "MBTA color" does not exist. Museum of Fine Arts | ||||||||||||||
வலைத்தளம் | gardnermuseum.org
|
வரலாறு
தொகு1840இல் பிறந்த இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெட்டும் இவரது கணவரான கார்ட்னெடரும் கலைப் பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தசாப்தம் உலகெங்கும் சுற்றி பல கலைப் பொருட்களை சேகரித்தனர். இவ்வாறு இவர்கள் சேகரித்த கலைப் பொருட்களைக் கொண்டு ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆவலைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1898இல் கார்ட்னெர் இறந்துபோனார். தனது கனவரின் ஆசையை நிறைவேற்ற உறுதி கொண்டார் இசபெல்லா. இதற்காக பாஸ்டனில் நிலம் வங்கி, அங்கு விலார் சீஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரின் வடிவமைப்பில், இத்தாலியின் வெனிஸ் அரண்மனையின் வடிவமைப்பில் அருல்காட்சியகக் கட்டிடத்தை உருவாக்கினார். இது நான்கு தளங்களைக் கொண்ட மாளிகையாக இது உருவானது. இதனையடுத்து 1903 சனவரி முதல் நாளன்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "National Register of Historical Places: Massachusetts (MA), Suffolk County". National Register of Historic Places. National Park Service. 11 March 2007.
- ↑ முகில் (31 சூலை 2019). "காணாமல்போன ஓவியங்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2019.