இசுடுட்சாட்
ஸ்டுட்சாட் (STUDSAT) என்பது மாணவர்களின் செயற்கைக்கோள்; இது இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் பீகோ-செயற்கைக்கோள் ஆகும். கர்நாடக, ஆந்திர மாநிலப் பொறியியல் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டுட்சாட் 1 கிகி-இற்கும் குறைவான நிறையே உடையது.[1][2][3]
முதன்மை நோக்கங்கள்
தொகு- கல்வி நிறுவனங்களில் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பரப்புதல்
- சிறு செயற்கைக்கோள்களின் ஆய்வு-மேம்பாட்டை ஊக்கப்படுத்துதல்
- செயற்கைக்கோளிற்கும் தரை நிலையத்திற்கும் ஒரு தொடர்பிணைப்பை ஏற்படுத்துதல்
- 90 மீ பிரிதிறனுடன் புவியைப் படமெடுத்தல்
- தள்ளுசுமை, தொலைத்தொடர்பு பற்றிய தகவல்களைத் தரை நிலையத்திற்கு அனுப்புதல்
சில தகவல்கள்
தொகு- இது 630 கிமீ குத்துயரத்தில் இயங்குகிறது; இதன் சுற்றுப்பாதை கதிரவ-ஒத்தியங்குத் துருவப்பாதை ஆகும்.
கூட்டமைப்புக் கல்லூரிகள்
தொகுஇத்திட்டத்திற்கு நிதியுதவியும் மாணவர்களையும் அளித்த கல்லூரிகள் பின்வருமாறு:
- நிட்டீ மீனாக்ஷி தொழில்நுட்ப நிலையம் [Nitte Meenakshi Institute of Technology], பெங்களூரு.
- எம். எசு. ராமையா தொழில்நுட்ப நிலையம் [M.S. Ramaiah Institute of Technology], பெங்களூரு.
- ராஷ்ட்ரீய வித்யாலயா பொறியியல் கல்லூரி [Rashtriya Vidyalaya College of Engineering], பெங்களூரு.
- பி.எம்.எசு. தொழில்நுட்ப நிலையம் [B.M.S. Institute of Technology], பெங்களூரு.
- சைதன்ய பாரதி தொழில்நுட்ப நிலையம் [Chaitanya Bharathi Institute of Technology], ஐதராபாது.
- வானூர்திப் பொறியியல் நிலையம் [Institute of Aeronautical Engineering], ஐதராபாது.
- விஞ்ஞான் தொழில்நுட்ப-அறிவியல் நிலையம் [Vignan Institute of Technology&Science], ஐதராபாது.
வெளி இணைப்புகள்
தொகு- இசுரோ வலைத்தளம் [1] பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "PSLV to launch five satellites on July 12". The Deccan Chronicle. http://www.deccanchronicle.com/national/pslv-launch-five-satellites-july-12-942.
- ↑ "STUDSAT". N2YO.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Display: STUDSAT 2010-035B". NASA. 14 May 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.