இசுடெர்கோரைட்டு

பாசுப்பேட்டுக் கனிமம்

இசுடெர்கோரைட்டு (Stercorite) என்பது அமோனியம் சோடியம் பாசுபேட்டு உப்பின் கனிம வடிவமாகும். இந்த பெயர் சாணத்தைக் குறிக்கும் இலத்தீன் சொல்லான இசுடெர்கசு என்ற சொல்லிலிருந்து வந்தது. ஏனெனில் இந்த கனிமம் முதன் முதலில் குவானோ எனப்படும் கடற்பறவைகள் அல்லது வௌவால்களின் கழிவிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இசுடெகோரைட்டு கனிமத்தை Stc[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

இசுடெர்கோரைட்டு
Stercorite [1]
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(NH4)NaHPO4
இனங்காணல்
மோலார் நிறை137.0077 கி/மோல்
படிக அமைப்புமுச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுபளபளக்கும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
அடர்த்தி1.615 கி/செ.மீ3
உருகுநிலை79 °C (174 °F)
உருகுதன்மைஉருகும்
கரைதிறன்நீரில் கரையும்

மேற்கோள்கள்

தொகு
  1. "Stercorite". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 23 March 2011.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெர்கோரைட்டு&oldid=4119038" இலிருந்து மீள்விக்கப்பட்டது