இசுபிரிங்கர் பதிப்பகம்

இசுபிரிங்கர் பதிப்பகம் அல்லது இசுபிரிங்கர் சயின்சு+பிசினசு மீடியா என்பது புத்தங்கள், மின் நூல்கள் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையில் ஆய்விதழ்களை வெளியிடும் ஒரு பதிப்பகம் ஆகும்.[1] இது தவிர இசுபிரிங்கர் நிறுவனம் இசுபிரிங்கர் லிங்க், இசுபிரிங்கள் புரோட்டகால், இசுபிரிங்கர் இமேஜ் போன்ற அறிவியல் தரவுதளங்களையும் வழங்குகிறது. புத்தக வெளியீட்டை பொருத்த வரையில் இதுவரை 24 துறைகளில் 1,68,000 மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் மற்றும் மின்னூல்களை வெளியிட்டுள்ளது.[2] இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் பெர்லின், ஹெய்டல்பெர்க், தொர்தெரிச் நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ளது.

இசுபிரிங்கர் பதிப்பகம்
துவங்கப்பட்டது1842
துவங்கியவர்ஜூலியசு இசுபிரிங்கர்
நாடுஜெர்மனி
தலைமையகம்பெர்லின், ஹெய்டல்பெர்க
தலைப்புகள்அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம், போக்குவரத்து மற்றும் கட்டிடக்கலை
அதிகாரப்பூர்வ இணைத்தளம்www.springer.com

ஜனவரி 15, 2015 இல், ஜோர்க் வோன் ஹோல்ட்சுபிரிங்க் பதிப்பக குழுமம் / நேச்சர் பதிப்பக குழுமம் மற்றும் இசுபிரிங்கர் சயின்சு+பிசினசு மீடியா இணைப்பை அறிவித்தன.[3] இந்த பரிமாற்றம் மே 2015 இல் முடிவுக்கு வந்து புதிய இணைப்பு நிறுவனமான, இசுபிரிங்கர் நேச்சர் உருவாக்கப்பட்டது. இதில் ஹோல்ட்சுபிரிங்க் 53% பெரும்பான்மை பங்குகளையும், பிசி பார்ட்னர்சு 47% ஐயும் கொண்டுள்ளன.[4]

குறிப்புகள்

தொகு
  1. "648808Z புரபைல் & எக்சிகியூடிவ் - இசுபிரிங்கர் சயின்சு+பிசினசு மீடியா GmbH - புளும்பெர்க்". bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
  2. "சர்ச் ரிசல்ட் (விதின் புக்)". SpringerLink. இசுபிரிங்கர். பார்க்கப்பட்ட நாள் 1 March 2014.
  3. "ஹோல்ட்சுபிரிங்க் பதிப்பக குழுமம் மற்றும் பிசி பார்ட்னர்சு அனவுன்சு அக்ரிமண்டு டு மெர்ஜ் மெஜாரிட்டி ஆப் மேம்மிலன் சயின்சு அண்டு எஜூகேசன் வித் இசுபிரிங்கர் சயின்சு+பிசினசு மீடியா", Jan. 15, 2015.
  4. கரோலின் கார்பென்டர் (May 6, 2015). "கம்பிளீட்டட் மெர்ஜர் பார்ம்சு 'இசுபிரிங்கர் நேச்சர்'". தி புக்செல்லர். http://www.thebookseller.com/news/completed-merger-forms-springer-nature. பார்த்த நாள்: July 8, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபிரிங்கர்_பதிப்பகம்&oldid=2010017" இலிருந்து மீள்விக்கப்பட்டது