பதிப்பகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொதுமக்களுக்குத் தகவல்களைக் கிடைக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாக, நூல்களையும், வேறு தகவல்களையும் பதிப்பித்து வெளியிடும் நிறுவனங்கள் பதிப்பகங்கள் எனப்படுகின்றன. முன்னர் நூல்கள், செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்ற அச்சிடப்படுவனவற்றை வெளியிடுவதே பதிப்பகங்களின் பணியாக இருந்தது. இன்று கணினித் தொழில்நுட்பத்தினதும், தகவல் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியோடு, பதிப்பகங்களினது ஈடுபாட்டு எல்லை விரிவடைந்து வருகின்றது. ஒலிப்பேழைகள், மின்நூல்கள் என்பன மேலதிகமாக இன்று பதிப்பு நடவடிக்கைகளில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் பல பதிப்பகங்கள் இணையப் பதிப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன.