இசுப்பிரங் தாளம்
ஸ்பிரங் தாளம் (Sprung rhythm) என்பது இயற்கையான பேச்சின் தாளத்தைப் பின்பற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கவிதைத் தாளமாகும். அது அழுத்தி உச்சரிக்கப்பட வேண்டிய முதல் அசையைக் கொண்ட சீரிலிருந்து கட்டமைக்கப்படுகிறது; பல அழுத்தி உச்சரிக்காத அசைகள் அதனைத் தொடராலாம்.[1] இதை அறிமுகபடுத்தியவர் ஜெரார்டு மேன்லி ஆப்கின்சு என்ற பிரித்தானியக் கவிஞர் ஆவார். ஆப்கின்சு, பழைய ஆங்கில நாட்டுப்புறப் பாடல்கள், வசன கவிதைகள, வில்லியம் சேக்சுபியர், ஜான் மில்டன் கவிதைகளில் பெயர் அறியப்படாத நிலையில் இச் சந்தத்தைத் தான் கண்டதாகக் கூறுகிறார். அவர் அழுத்தி உச்சரிக்கப்பட வேண்டியவைகளை குறிப்பிடுவதற்கு சுட்டிக்காட்டுதலில் குறியெழுத்து (acute e.g. á , shéer) வழிமுறைகளைப் பயன்படுத்தினார். இதில் இவர் அசையின் இயல்பான நேரத்தை, உச்சரிக்கும் அசை சார்ந்த நேரமாக மாற்றினார். சில திறனாய்வாளர்கள், அவர் வெறுமனே கலப்பு, ஒழுங்கற்ற சீர்களைக் கொண்ட புதுக்கவிதை போன்றவற்றுக்கு இவ்வாறு ஒரு பெயரிட்டுள்ளதாக் கருதுகின்றனர் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sprung Rhythm in Hopkins", Britannica Online
- ↑ Schneider, E. W. (June 1965). "Sprung Rhythm: A Chapter in the Evolution of Nineteenth-Century Verse". PMLA. 80 (3): 237–253.