இசுரான்லி கிப்பன்சு விபரப்பட்டியல்

இசுரான்லி கிப்பன்சு விபரப்பட்டியல் என்பது, ஸ்டான்லி கிப்பன்ஸ் லிலிட்டெட் என்னும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். இது உலகில் வெளியிடப்படும் எல்லாத் தபால்தலைகளையும் அவற்றின் தொடக்க காலத்திலிருந்து பட்டியல் இடுகிறது.


முதலாவது ஸ்டான்லி கிப்பன்ஸ் விபரப்பட்டியல் நவம்பர் 1865 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு மாதம் ஒருமுறை வெளிவந்தது. இப்பொழுது இந் நிறுவனம், நாடுகள், பிரதேசங்கள், சிறப்பு வகைகள் போன்ற அடிப்படைகளில் பல விபரப்பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இவற்றுட் பல ஒவ்வொரு ஆண்டும் திருத்தி வெளியிடப்படுவதுடன், தபால்தலை சேகரிப்பாளருக்கு வேண்டிய பல தகவல்களையும் உள்ளடக்கி இருக்கின்றன.


ஸ்டான்லி கிப்பனின் முழு உலகத்துக்கான விபரப்பட்டியல் உலகின் எல்லாநாடுகளிலும் வெளியிடப்பட்ட தபால்தலைகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்குரிய பதிப்பில் ஏறத்தாழ 474,000 தபால்தலைகள் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன.


இதில் குறிப்பிடப்படும் விலைகள், குறிப்பிட்ட நேரத்தில் அவற்றை விற்கும் விலைகளுக்கான மதிப்பீடுகள் மட்டுமே. அவ்விலைகளைக் குறிப்பிட்ட தபால்தலைகளின் உண்மையான பெறுமதியாகக் கொள்ள முடியாது.


வெளியிணைப்புக்கள்

தொகு