இசுராலினிசம்

இசுராலினிசம் என்பது சோவியத் ஒன்றியத்தின் 29 ஆண்டுகள் தலைவராக இருந்த யோசப் இசுராலினின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் அரசாட்சிக் முறைமையும் ஆகும். விரைவான தொழில்மயமாக்கம், ஐந்து ஆண்டுத் திட்டங்கள், சர்வதிகாரத் தலைவர், இரகசியக் காவல்துறை, மோசமான பரப்புரை, வன்முறையான அரசியல் ஒடுக்குமுறை போன்ற கூறுகளை இசுராலினிசம் கொண்டது.[1][2][3]

கொள்கைகள்

தொகு

தேசியங்கள்

தொகு

தேசியம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வதிலும், தேசியங்களின் உரிமைகள் தொடர்பாகவும் இசுராலின் அதிகாரத்துக்கு வர முன்பும் பின்பும் முரணான கொள்கைகளை முன்னெடுத்தார். அதிகாரத்திற்கு வர முன்பு உருசிய மேலாண்மைக்கு எதிராகவும், தேசியங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கு ஆதரவாகவும் அவர் கருத்து முன்வைத்திருந்தார். இவரது Marxism and the National Question என்ற ஆக்கம் இந்த வகையில் முக்கியம் பெறுகிறுது. இது லெனனின் ஆதரவைப் பெற்ற ஆவணம் ஆகும். இருவரும் சேர்ந்து Declaration of Rights of Peoples of Russia என்ற சான்றுரையிலும் கையப்பம் இட்டுள்ளார்கள்.

இசுராலின் சோவியத் ஒன்றியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் (1930 கள் தொடக்கம்) தேசியங்கள் தொடர்பான கொள்கைகள் நேர் எதிராக மாறின. தேசியங்கள் உருசிய சோவியத்துடன் ஒத்துப் போவது, நடுவன் அரசிற்கு கட்டுப்படுவது அவருக்கு முக்கியம் ஆகிற்று. உருசிய மொழியும் பண்பாடும் முதன்மை பெற்று, அவையே சோவியத் ஒன்றியத்தின் இணைப்புக் கூறுகளாக அவரால் முன்னிறுத்தப்பட்டன. இதனால் உருசியர் இல்லாத தேசியங்களை நசுக்குவதில் அவர் ஈடுபட்டார். இதன் ஒரு கோரமான ஒரு வெளிப்பாட யுக்ரேனிய மக்களை கட்டாயைப் பட்டினிப் படுகொலை செய்த கோலதமோர்.

ஒரு நாட்டில் சமவுடமை

தொகு

ஒரு நாட்டில் சமவுடமை என்பது சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதே முதன்மையானது என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ஆகும். எல்லா நாடுகளில் புரட்சி, தொழிலாளர் ஆட்சி தேவை என்ற அடிப்படை கோட்பாட்டில் இருந்து இந்தக் கொள்கை விலகுகிறது.

Aggravation of class struggle under socialism

தொகு

The theory of aggravation of the class struggle along with the development of socialism, a theoretical base supporting the repression of political opponents as necessary.

மேற்கோள்கள்

தொகு
  1. Kershaw, Ian; Lewin, Moshe (28 April 1997). Stalinism and Nazism: Dictatorships in Comparison (in ஆங்கிலம்). Cambridge University Press. pp. 88–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-56521-9.
  2. Baratieri, Daniela; Edele, Mark; Finaldi, Giuseppe (8 October 2013). Totalitarian Dictatorship: New Histories (in ஆங்கிலம்). Routledge. pp. 1–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-04396-4.
  3. Deutscher, Isaac (1967). Stalin: A Political Biography (in ஆங்கிலம்). Oxford University Press. p. ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-020757-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுராலினிசம்&oldid=4133001" இலிருந்து மீள்விக்கப்பட்டது