முதன்மை பட்டியைத் திறக்கவும்

கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்: Голодомор) அல்லது பட்டினியால் படுகொலை என்பது 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படுகொலை ஆகும். இந்த நிகழ்வு உக்ரேனிய பட்டினி இனப்படுகொலை, தீவிரவாத உக்ரேனிய இனப்படுகொலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வில் 1.5 இலிருந்து 12 மில்லியன் உக்ரேனிய மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோலதமோர் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் அக் கால சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ராலினின் கொள்கை ஆகும். உக்ரேனினில் நிகழ்ந்த உக்ரேனிய தேசியவாதத்தை தகர்க்க உக்ரேனிலில் இருந்து எல்லா உணவு மூலங்களும் வெளியேற்றப்பட்டன. உக்ரேனில் இருந்து எவரும் வெளியேறத் தடைசெய்யப்பட்டது. ஸ்ராலினின் கட்டளையில் நடந்த இந்த செயற்பாடுகள் பட்டினி படுகொலைக்கு மூல காரணம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலதமோர்&oldid=1478438" இருந்து மீள்விக்கப்பட்டது