இசுலாத்தில் கடவுள்
இசுலாமிய நம்பிக்கைகளின் படி, கடவுள் (அரபு மொழி: الله Allāh) என்பவர் அனைத்து ஆற்றல்களும் கொண்டவராகவும் அனைத்தையும் பற்றி அறிந்தவாராகவும், அனைத்தையும் படைத்துக் காப்பவராகவும், இவ்வுலகின் அதிபதியும் ஆவார்.[1] இசுலாம் ஓரிறைக் கொள்கையை (tawḥīd )[2] வலியுறுத்துகிறது.[3] குர்ஆன் இறைவனைப் பற்றிக் கூறும் போது, "அவனைக் கண்கள் காணாது. ஆனால் அவனோ கண்களைக் காண்கிறான்: அதாவது கடவுள் எதனுடனும் ஒப்பிடத் தகுந்தவரல்லர். அனைத்தையும் விட உயர்வானவர்." எனக் குறிப்பிடுகின்றது.[4][5][6]
குர்ஆனின் 112 ஆவது சூராவனது அல்-இக்லாசு (உளத்தூய்மை) அல்லாஹ்வின் தகுதிகளைக் கூறுகிறது.
(112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ "அல்லாஹ் , [அவன்] ஒருவனே", (112:2) اللَّهُ الصَّمَدُ "அல்லாஹ் , எவ்வித தேவையும் அற்றவன்". (112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ "அவன் (யாரையும்) பெறவுமில்லை, (யாராலும்) பெறப்படவுமில்லை". (112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ "அவனுக்கு நிகராக எதுவுமில்லை."[7]
இசுலாத்தில் 99 பெயர்களால் (أسماء الله الحسنى al-asmāʼ al-ḥusná பொருள்: "அழகிய பெயர்கள்"), கடவுள் குறிப்பிடப்படுகிறார். ஒவ்வொரு பெயரும் கடவுளின் ஒவ்வொரு தன்மையைக் குறிப்பதாகும்.[8][9] இந்த அனைத்துப் பெயர்களும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.[10] இந்த தொன்னூற்று ஒன்பது பெயர்களுள் அதிகம் பயன்படுத்தப்படுபவை "அளவற்ற அருளாளன்" (al-raḥmān) மற்றும் "நிகரற்ற அன்புடையோன்" (al-raḥīm) என்பவையாகும்.[8][9] இப்பெயர்கள் குர்ஆனின் முதல் சூராவான பாத்திஹாவின் ஆரம்ப வசனங்களில் கூறப்படுகின்றன. அகில உலகங்களில் உள்ள அனைத்தையும் படைத்து, அவை அனைத்தையும் காத்து, அவற்றை நேரிய வழிகளில் செலுத்தும் இறைவன் அளவற்ற அருளாளனகவும், நிகரற்ற கருணையும், அன்பும் கொண்டவன் என்பது இப்பெயர்களின் பொருள்களாகும்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ கெர்கார்டு போவரிங்கு காடு அண்டு இசு அட்ரிபியூட்சு (ஆங்கிலம்), குர்ஆனின் கலைக்களஞ்சியம் Quran.com, இசுலாம்: தி இசுட்ரெய்ட்டு பாத்து (ஆங்கிலம்), ஆக்சுபோர்டு பல்கலைகலைக்கழக பதிப்பகம், 1998, p.22
- ↑ சான் எல். எசுபோசிட்டோ, இசுலாம்: தி இசுட்ரெய்ட்டு பாத்து (ஆங்கிலம்), ஆக்சுபோர்டு பல்கலைகலைக்கழக பதிப்பகம், 1998, p.88
- ↑ "அல்லாஹ்." பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் 2007. பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்
- ↑ திருக்குர்ஆன் 6:103
- ↑ திருக்குர்ஆன் 29:46
- ↑ எபு. இ. பீட்டர்சு, இசுலாம் (ஆங்கிலம்), p.4, பிரின்சுடன் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2003
- ↑ "புனித குர்ஆன்".
- ↑ 8.0 8.1 பென்ட்லி, டேவிட்டு (செப்டம்பர் 1999). தி 99 பியூட்டிபுல் நேம்சு ஆப் காடு பார் ஆல் தி பீப்பிள் ஆப் தி புக்கு (ஆங்கிலம்). வில்லியம் கேரி நூலகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87808-299-9.
{{cite book}}
: Check date values in:|date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 9.0 9.1 என்சைக்ளோபீடியா ஆப் மாடர்ன் மிடில் ஈசுடு அண்டு நார்த்து ஆப்ரிக்கா, அல்லாஹ்
- ↑ அன்னிமேரி இசுக்கிம்மல்,தி தாவோ ஆபு இசுலாம்: ஏ சோர்சுபுக்கு ஆன் சென்டர் ரிலேசுன்சிப் இன் இசுலாமிக்கு , சனி பிரசு, p.206
- ↑ பிரிட்டானிகா கலைக்களஞ்சியம், இசுலாம், p. 3