இசுலாமாபாத்து இலக்கியத் திருவிழா
இசுலாமாபாத்து இலக்கியத் திருவிழா (Islamabad Literature Festival) என்பது பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்து நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டு இலக்கிய விழா ஆகும்.
வரலாறு
தொகுஇசுலாமாபாத்து இலக்கியத் திருவிழா 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பாக்கித்தான் மற்றும் பன்னாட்டு அளவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட முக்கிய இலக்கிய பிரமுகர்கள், விருந்தினர் பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் வாசிப்பு மற்றும் இலக்கிய விவாத அமர்வுகள், விரிவுரைகள், கவிதை வாசிப்பு, நாடகங்கள், கலை கண்காட்சிகள் மற்றும் புத்தக வெளியீட்டு விழாக்கள் ஆகியவை நடைபெறுகின்றன. கராச்சி இலக்கிய விழாவைப் போலவே, இசுலாமாபாத்து இலக்கிய விழாவும் பாக்கித்தானின் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக பத்திரிகையால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.
பதிப்புகள்
தொகுமுதல் இசுலாமாபாத்து இலக்கியத் திருவிழா 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது பதிப்பு 25 முதல் 28 ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது [1] மூன்றாவது பதிப்பு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The second Islamabad Literature Festival". Dawn. 28 April 2014. http://www.dawn.com/news/1102836/the-second-islamabad-literature-festival. பார்த்த நாள்: 26 April 2015.