இசுலாமிய மக்கள் பரம்பல்

உலகின் மொத்த முஸ்லிம் சனத்தொகை - ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை[https://web.archive.org/web/20080615140203/http://www.adherents.com/Religions_By_Adherents.html பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம் [1]] (தோராயமாக ) இது ஒவ்வொரு அமைப்புக்களின் கருத்து கணிப்புபடி வேறுப்படுகிறது. என்றாலும் www.adherents.com மற்றும் Pew Research Center ஆகியவைகளின் 2009 ஆம் ஆண்டுக்கான கருத்து கணிப்புப்படி உலக முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை ஏறத்தாள 150 - 157 கோடி என்பதாகும். அதாவது மொத்த உலக சனத்தொகையில் 23%

உலகில் இசுலாமியர் பரவல்

மொத்த முஸ்லிம்களில்

 • சன்னி முஸ்லிம்கள் 87% - 90%
 • சியா முஸ்லிம்கள் 10% - 13%
 • முஸ்லிம்கள் உலகிலுள்ள 5 கண்டங்களிலும் வாழ்கின்றனர்.
 • மொத்த முஸ்லிம்களில் 60% க்கும் அதிகமானோர் ஆசிய கண்டத்தில் வாழ்கின்றனர்.
 • மொத்த முஸ்லிம்களில் 20%கும் அதிகமானோர் மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் வாழ்கின்றனர்.
 • மொத்த முஸ்லிம்களில் சுமார் 67% ஆனோர் 10 நாடுகளில் வாழ்கின்றனர். அவையாவன: இந்தோனீசியா, பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், எகிப்து, நைஜீரியா,ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொரோக்கோ.
 • சுமார் 31 கோடி முஸ்லிம்கள் அதாவது 20% முஸ்லிம்கள், இஸ்லாம் சிறுப்பான்மை மதமாக காணப்படும் நாடுகளில் வாழ்கின்றனர். ஆனாலும் பல கட்டங்களில் இந்த சிறுப்பான்மை நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கை முஸ்லிம் நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையைவிட அதிகமானது.

  உதாரணமாக இந்தியா உலகின் 3 வது மிகப்பெரிய முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. சீனாவின் முஸ்லிம் சனத்தொகை சிரியாவை விடவும், ரஷ்யாவின் முஸ்லிம் சனத்தொகை ஜோர்தான் மற்றும் லிபியா ஆகிய இரு நாடுகளின் கூட்டுத்தொகையை விடவும், ஜெர்மனியின் முஸ்லிம் சனத்தொகை லெபனானை விடவும் கூடியது.

 • சனத்தொகையின்படி உலகின் மிகபெரிய முஸ்லிம் நாடு இந்தோனேசியா - முஸ்லிம்கள் எண்ணிக்கை - ஏறக்குறைய 20 கோடி - மொத்த முஸ்லிம் சனத்தொகையில் 13%
 • மொத்த ஷியாக்களின் சனத்தொகையில் சுமார் 68% - 80% ஆனோர் 4 நாடுகளில் வாழ்கின்றனர். அவையாவன:ஈரான் , பாகிஸ்தான்,இந்தியா,ஈராக்
 • உலக நாடுகளில் ஏறக்குறைய 50 நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்.
 • உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முதல் 10 நாடுகள்:
  முதல் 10 நாடுகள்
  நாடுகள் எண்ணிக்கை
  இந்தோனேசியா 202,867,000
  பாகிஸ்தான் 174,082,000
  இந்தியா 160,945,000
  பங்களாதேஷ் 145,312,000
  எகிப்து 78,513,000
  நைஜீரியா 78,056,000
  ஈரான் 73,777,000
  துருக்கி 73,619,000
  அல்ஜீரியா 34,199,000
  மொரோக்கோ 31,993,000

  மேற்கோள்கள்

  தொகு
  Mail of Islam
  http://pewresearch.org
  http://www.adherents.com/Religions_By_Adherents.html பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம்
 • "https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமிய_மக்கள்_பரம்பல்&oldid=3286226" இலிருந்து மீள்விக்கப்பட்டது