இசுலாம் உதீன்

இந்திய அரசியல்வாதி

இசுலாம் உதீன் (Islam Uddin) என்பவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யைச் சார்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் வடக்கு திரிபுரா மாவட்டம் மற்றும் திரிபுராவின் கிழக்குப் பகுதியில் உள்ள கடம்தலா-குர்தி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இசுலாம் உதீன்
Islam Uddin
திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
2018–2023
முன்னையவர்பைசூர் இரகுமான்
தொகுதிகடம்தலா-குர்தி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஆரம்ப வாழ்க்கையும் அரசியலும்

தொகு

2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடம்தலா-குர்தி சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக இசுலாம் உதீன் போட்டியிட்டு 57.73% (20,721) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் கியாசு உதின் சவுத்ரி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திங்கு ராய் ஆகியோரை தோற்கடித்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "KADAMTALA KURTI Election Result 2018, Winner, KADAMTALA KURTI MLA, Tripura" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்_உதீன்&oldid=3802912" இலிருந்து மீள்விக்கப்பட்டது