இரமணன் (சொற்பொழிவாளர்)
கவிஞர்
(இசைக்கவி ரமணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரமணன் நெல்லையில் பிறந்தவர். இவர் இசைக்கவி இரமணன் என்று அறியப்படுகிறார். இவர் ஒரு தொகுப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர் என பல முகங்கள் கொண்டவர். ‘தி இந்து’ பத்திரிகையில் (சென்னை-பெங்களூரு-மதுரை-பெங்களூரு-சென்னை-விசாகப்பட்டினம்) என்று 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவர் அகில இந்திய வானொலியிலும் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
சில சொற்பொழிவுகள்
தொகு- சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார்.[1]
- கோவையில் "பாரதி பார்வையில் கம்பன்" என்ற தலைப்பில் மணி உயர்நிலைப் பள்ளி, நாணி பல்கிவாலா அரங்கில் 2011ல் பேசினார்.[2]
உசாத்துணைகள்
தொகுவலைத்தளம்
தொகுisaikkaviramanan.com பரணிடப்பட்டது 2013-11-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 1
- ↑ "பாரதி பார்வையில் கம்பன்". Archived from the original on 2011-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-02.