இசையரங்கு இன்னிசைக் கோவை

இசையரங்கு இன்னிசைக் கோவை என்பது 1969இல் தேவநேயப்பாவாணரால் இயற்றப்பட்டதும் முகவை மாவட்டம் பறம்புக்குடியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் வேழத்திருமகள் என்னும் கசலட்சுமியாரால் பாடப்பட்டதும் ஆன இசைப்பாடல் சுவடியே ஆகும்.

31 பக்கங்களை உடைய இச்சுவடியில், 34 இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 20 பாடல்களுக்கு இசைமெட்டுகள் கட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு பாடலை (21) இசைந்த மெட்டில் பாடுக என்ற குறிப்புள்ளது. எஞ்சிய பாடல்களுக்குப் பண்ணும், தாளமும் குறிக்கப்பட்டுள்ளன.

'ஆதி' முன்னை எனவும், 'மோகனம்' முல்லை எனவும், 'சாப்பு' இரட்டை எனவும், 'ரூபகம்' ஈரொற்று எனவும் பண்ணும், தாளமும் தமிழாக்கம் பெற்றுள்ளள.

சில பக்கங்கள்

தொகு

தமிழா உன்றன் முன்னவனே
தலையாய் வாழ்ந்த தென்னவனே (பக்கம்-4)

சுரையாழ அம்மி மிதப்ப என்னும் மொழிமாற்றுப் பொருள்கோளை, தமிழ்நாட்டின் நிலைக்கு எடுத்துக்காட்டுகிறார்.

சிறிது கற்றோர் பெருகி வாழ,
பெரிது கற்றோர் சிறுகி வீழலை (பக்கம்-15)

தமிழனுக்கு இணையில்லை உலகில்,
தாய்மொழி பேணாமைக்கு என்பது சுவையான முரண் (பக்கம்-19)

கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார்
கல்லாத பேதரே தமிழ்க் காவலராகி வென்றார் (பக்கம்-24)

இவற்றையும் பார்க்கவும்

தொகு