இசையில் இரைச்சல்
இசையில் இரைச்சல் (Noise in music) என்பது பலவிதமாக விவரிக்கப்படுகிறது. இரைச்சல் என்பது உறுதியற்ற, கட்டுப்பாடற்ற, மெல்லிசையற்ற, உரத்த, அல்லது இசையற்ற, அல்லது தேவையற்ற ஒலி என்று விவரிக்கப்படுகிறது. சரியான வரையறையானது பெரும்பாலும் கலாச்சார விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட சுவைகள் இரண்டும் இணைந்த விஷயமாகும். இரைச்சல் என்பது மனிதக் குரல் மற்றும் அனைத்து இசைக்கருவிகளின் ஒலியின் ஒரு முக்கிய அங்கமாகும். மின்னணுவியில் கருவிகள் இரைச்சலின் பல்வேறு வகைகளை உருவாக்குகின்றன. மிகவும் பொதுவான பயன்பாட்டில், இரைச்சல் என்பது தேவையற்ற ஒலி அல்லது சமிக்ஞையாகும். இந்தப் பொருளில், மற்றொரு சூழலில் இசை ரீதியாக சாதாரணமாக உணரப்படும் ஒலிகள் கூட பெறுபவரால் விரும்பும் செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்டால் இரைச்சலாக மாறும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Attali 1985, 27.