இஜி டொயோடா

இஜி டொயோடா (Eiji Toyoda) ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் 12 -ம் தியதி செப்டம்பர் மாதம் 1913 ஆம் ஆண்டு பிறந்தவர்.[1] இவர் டொயோட்டா வாகனத் தொழிற்சாலையின் தலைவர் ஆவார்.[2]

இஜி டொயோடா
Eiji toyoda.jpg
பிறப்புசெப்டம்பர் 12, 1913(1913-09-12)
ஜப்பான்
இறப்பு17 செப்டம்பர் 2013(2013-09-17) (அகவை 100)
டோக்கியோ
தேசியம்ஜப்பானியர்
கல்விடோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகம்
பணிதலைவர் , டொயோட்டா

வாழ்க்கைதொகு

டொயோடா 1933 முதல் 1936 வரை டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் இயந்திரவியல் பட்டம் பெற்றவர்.[3] அப்போது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் கிச்சிரோ வாகனத் தொழிற்சாலையைத் மத்திய ஜப்பானின் நாகோயோ நகரத்தில் தொடங்கினார். இஜி டொயோடா இந்தத் தொழிற்சாலையில் அவரது சகோதரருடன் இணைந்து கொண்டார். 1938-ல் கிச்சிரோ டொயோடா -வை நாகோயோ நகரிலிருந்து 32 கிலோமீட்டர் கிழக்கே தனியாக தொழிற்சாலையைக் கட்டச் சொன்னார். இதுவே டொயோட்டா வாகனத் தொழிற்சாலை ஆகும்.[4]

மரணம்தொகு

17 செப்டம்பர் 2013 அன்று தனது 100வது பிறந்தநாள் முடிந்து 5 நாட்கள் கடந்தபின் இருதய நோயால் ஜப்பானின் டொயோட்டா நகரத்தில் காலமானார்.[5] மரணமடையும்போது அவர் டொயோட்டா பணியாளர்களுக்காக 1938 இல் தொடங்கப்பட்ட டொயோட்டா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.[6]

மேற்கோள்கள்தொகு

  1. Inoue, Kae; Anna Mukai and Yuki Hagiwara (2013-09-16). "Eiji Toyoda, Who Turned Toyota Into Export Giant, Dies at 100". Bloomberg News. http://www.bloomberg.com/news/2013-09-17/eiji-toyoda-who-turned-toyota-into-export-giant-dies-at-100.html. பார்த்த நாள்: 2013-09-16. 
  2. "中日新聞:豊田英二氏死去 トヨタ最高顧問 100歳:社会(CHUNICHI Web)". Chunichi.co.jp (Japanese). 2013-09-17. 2013-09-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-17 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |trans_title= ignored (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  3. Toyoda, Eiji (1987). (1987). "Toyota - Fifty Years in Motion. Tokyo: Kodansha International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87011-823-4. 
  4. Dawson, Chester (2004). Lexus: The Relentless Pursuit. Singapore: John Wiley & Sons (Asia) Pte Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-470-82110-8. 
  5. Hirsch, Jerry (2013-09-17). "Eiji Toyoda, car family scion who developed Corolla and Lexus, dies". Los Angeles Times. http://www.latimes.com/business/autos/la-fi-hy-eiji-toyoda-obit-toyota-20130917,0,7476968.story. பார்த்த நாள்: 2013-09-18. 
  6. Kubota, Yoko (2013-09-17). "Eiji Toyoda, who helped steer Toyota's rise, dies at 100". Reuters. Archived from the original on 2013-09-18. https://web.archive.org/web/20130918092428/http://www.reuters.com/article/2013/09/17/toyota-eijitoyoda-idUSL4E8JN1OL20130917. பார்த்த நாள்: 2013-09-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜி_டொயோடா&oldid=3544742" இருந்து மீள்விக்கப்பட்டது