இடப்பெயர்ச்சி (கப்பல்)

கப்பல்களைப் பொறுத்தவரை, இடப்பெயர்ச்சி (displacement) அல்லது இடப்பெயர்ச்சித் தொன்னளவு (displacement tonnage) என்பது, கப்பல் மிதக்கும்போது அது இடம்பெயக்கும் நீரின் எடை ஆகும். இது அக்கப்பலினதும் அதற்குள்ளே இருப்பனவற்றினதும் மொத்த எடைக்குச் சமமாகும். இந்த முறை வணிகக் கப்பல்களைவிடக் கடற்படைக் கப்பல்கள் தொடர்பிலேயே பெரிதும் பயன்படுகிறது. அத்துடன், இந்த எடை பொதுவாக கப்பலின் எரிபொருட்தாங்கி நிரம்பியிருக்கும்போதும், களஞ்சியப் பொருட்கள் அனைத்தும் ஏறப்பட்ட பின்னருமே அளக்கப்படுகின்றது.[1][2]

கப்பல் மிதப்புயரக் குறிகள்

மேற்குறித்த இடப்பெயர்வை, கனவளவு, வணிகக் கப்பல்களில் பயன்படும் நிகரத் தொன்னளவு, மொத்தத் தொன்னளவு, நிலைத்த சுமைத் தொன்னளவு என்பவற்றை உள்ளடக்கிய கொள்ளளவு போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கணக்கீடு

தொகு
 
கப்பல் உறுதிப்பாட்டு நிரலைப் பயன்படுத்திக் கப்பலின் இடப்பெயர்ச்சியைக் கணிக்க முடியும்.

மரபுவழியாக கப்பல்களின் இடப்பெயர்ச்சி அளவைத் தீர்மானிப்பதற்கு மிதப்புயரக் குறிகள் (அல்லது சுமைக் கோடுகள்) பயன்படுகின்றன.[3] ஒரு வணிகக் கப்பலில் மூன்று தொகுதிக் குறியீடுகள் உள்ளன. ஒரு தொகுதி கப்பல் முகப்பின் வலப்புறம் இடப்புறங்களிலும், இன்னொன்று நடுப்பகுதியிலும், மற்றது பின்பக்கத்திலும் காணப்படும். இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கப்பலின் இடப்பெயர்ச்சியை 0.5% துல்லியத்துடன் தீர்மானிக்க முடியும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Dear and Kemp, 2006, p.588
  2. George, 2005, p. 68.
  3. 3.0 3.1 George, 2005. p.5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடப்பெயர்ச்சி_(கப்பல்)&oldid=2747385" இலிருந்து மீள்விக்கப்பட்டது