இடமணல் ஓதனேசுவரர் கோயில்

இடமணல் ஓதனேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் சீர்காழி அருகில் இடமணல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக ஓதனேசுவரர் உள்ளார். இறைவி அன்னபூரணி ஆவார். [1]

அமைப்பு தொகு

கிழக்கு நோக்கிய நிலையில் கோயில் அமைந்துள்ளது. நந்தியை அடுத்து மகா மண்டபம் காணப்படுகிறது. அடுத்து வலப்புறத்தில் இறைவியின் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளவாறு மூலவரின் திருமேனி பெரிய அளவில் உள்ளது. மண்டபத்தில் வலது புறம் முருகனும், இடது புறம் விநாயகரும் உள்ளனர். காவிரியின் வட கரைப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சுந்தரரும் அவருடைய சீடர்களும் வந்துகொண்டிருந்தபோது பூம்புகாருக்குப் பின் திருமுல்லைவாயில் நோக்கி நடந்தனர். நீண்ட நேர பயணத்தின் காரணமாக பசியடைந்த அவர்கள் மயக்கமடைந்தனர். யாரோ தம்மை எழுப்புவதாக உணர்ந்த அவர்கள் எழுந்து பார்த்தபோது ஓர் அந்தணர் அனைவருக்கும் உணவைப் பரிமாறினார். தம் பசியைப் போக்கியவருக்கு என்ன செய்வது என்று கேட்க அவர் மறைந்தார். தன் தந்தையில் நினைவாக கோயில்களைக் கட்டும்படி ஒரு அசரீரி ஒலித்தது. அது விநாயகரே என்று பின்னர் உணர்ந்து அவ்வாறே பத்து கோயில்களைக் கட்டினர். [1]

விழாக்கள் தொகு

அன்னாபிசேகம், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. [1]

மேற்கோள்கள் தொகு