இடிந்தகரை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

இடிந்தகரை (Idinthakarai), இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் வட்டத்தில் உள்ள இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விஜயாபதி ஊராட்சியில் அமைந்த கடற்கரை மீனவ கிராமம் ஆகும். இதனருகே கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது.

அமைவிடம்தொகு

விஜயாபதி ஊராட்சியில் உள்ள இடிந்தகரை கிராமம், இராதபுரத்திற்கு தெற்கே 12 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவிலும் உள்ளது.

தொழில், போக்குவரத்து & மக்கள்தொகு

இக்கிராம மக்களின் முக்கியத் தொழில் கடலில் மீன் பிடித்தலாகும். இடிந்தகரையிலிருந்து இராதாபுரம், திருநெல்வேலி, வள்ளியூர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடிக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளது. இடிந்தகரையில் 2 தொடக்கப் பள்ளிகளும், 1 மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இக்கிராம மக்களில் பெரும்பாலோர் உரோமன் கத்தோலிக்கர்கள் ஆவர். இடிந்தகரை கிராமம் கடல்மட்டத்திலிருந்து 3 அடி உயரத்தில் உள்ளது.

போராட்டங்கள்தொகு

  • 27 அக்டோபர் 1967-இல் உரோமன் கத்தோலிக்க மீனவர்களின் வருவாயிலிருந்து பெரும்தொகையை தேவாலய குருக்கள் ஆலயத்திற்கு கட்டாய நிதி செலுத்த வலியுறுத்தியதன் விளைவாக, கிறித்த மீனவர்களிடையே எழுச்சியால், 8 ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின்னர் பலர் இந்து சமயத்திற்கு மாறினர், பின்னர் அதில் பலர் மீண்டும் கிறித்தவ சமயத்திற்கே மாறினர்.

மேற்கோள்கள்தொகு

  1. Idinthakarai: A beacon of protest
  2. Anti-nuclear protester booked for explosion which killed 6 near Kudankulam N-plant
  3. Kudankulam protest: 1500 villagers bury themselves in neck-deep sand
  4. Is Idinthakarai on the edge of lawlessness?

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிந்தகரை&oldid=2981727" இருந்து மீள்விக்கப்பட்டது