இடிபாடு கழிவு

இடிபாடு கழிவுகள் (Demolition waste) என்பது கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் அல்லது பிற கட்டமைப்புகளை அழிப்பதிலிருந்து பெறப்படும் கழிவுக் குப்பைகள் ஆகும்.[1] இக்குப்பைகள் கலவையின் அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் எடையின் அடிப்படையில், அமெரிக்காவில் பைஞ்சுதை, மர பொருட்கள், நிலக்கீல், செங்கல் மற்றும் களிமண் ஓடு, எஃகு மற்றும் உலர்வால் ஆகியவை எனப் பிரிக்கின்றனர்.[2] இடிக்கும் கழிவுகளின் பல கூறுகளை மறுசுழற்சி செய்யும் சாத்தியமும் உள்ளது.[1]

இடிப்பு கழிவு

கலவை

தொகு

2014ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 505.1 மில்லியன் டன் இடிபாடு குப்பைகள் உருவாக்கப்பட்டன. 505.1 மில்லியன் டன்களில், குப்பைகள் 353.6 மில்லியன் டன் பைஞ்சுதை, 76.6 மில்லியன் டன் நிலக்கீல் கான்கிரீட், 35.8 மில்லியன் டன் மர தயாரிப்பு, 12.7 மில்லியன் டன் நிலக்கீல், 11.8 மில்லியன் டன் செங்கல் மற்றும் களிமண் ஓடுகள், 10. டன் உலர்வால் மற்றும் பிளாஸ்டர், மற்றும் 4.3 மில்லியன் டன் எஃகு இருந்தது.[2]

அகற்றல்

தொகு

இடிபாடு குப்பைகள் பிரித்தெடுக்கப்படுவதற்கு முன், ஈயம், கல்நார் அல்லது பிற அபாயகரமான பொருட்களிலிருந்து ஏற்படும் மாசுபடுவதைத் தீர்க்க இவற்றை முன்னரே தனியே பிரித்தெடுக்க வேண்டும்.[3] கூட்டாட்சி விதிமுறைகளின்படி, அபாயகரமான பொருட்கள் தனித்தனியாக அகற்றப்பட வேண்டும்.[3] இடிக்கப்படும் குப்பைகளைக் கட்டுமானம் மற்றும் இடிபாடு குப்பைகள் நிலம் அல்லது நகராட்சி திடக்கழிவு நிலப்பரப்புகளில் அப்புறப்படுத்தலாம்.[4] மாற்றாக, குப்பைகளைத் தரப்படுத்திப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யலாம். பிரித்தெடுத்தலானது இடிபாடு நிகழும் தளத்தில், பிரித்தெடுக்கும் இடத்தில் அல்லது கட்டுமான இடிபொருள் மறுசுழற்சி மையத்தில் நிகழலாம்.[4] பிரித்தெடுத்தப்பட்ட பிறகு, பொருட்கள் தனித்தனியாகத் தரத்திற்கேற்ப மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

மீள் சுழற்சி

தொகு

பைஞ்சுதை மற்றும் செங்கல் பைஞ்சுதை மற்றும் செங்கல் ஆகியவற்றை நொறுக்கி மறுசுழற்சி செய்யலாம்.[5] பிரித்தெடுக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு அகற்றலாம். மீட்டெடுக்கப்பட்ட பைஞ்சுதை அல்லது செங்கல் கழிவு மொத்தமாக, பள்ளங்களை நிரப்பு, சாலைத் தளம் அமைக்கப் பயன்படுத்தப்படலாம்.[5]

மரம் மரக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்தலாம். மறுபயன்பாடு செய்யலாம், மறுசுழற்சி செய்யலாம் அல்லது உயிர் ஆற்றலாக மாற்றலாம்.[1] இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்படும் மரத் தளபாடுகளை பயன்படுத்தக்கூடிய சிறிய கட்டிடக் கூறுகளாகப் பயன்படுத்தினால், முழு அளவிலான புதிய மரக்கட்டைகளின் தேவை குறையும். மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தைப் பாதைகள், உறைகள், தழைக்கூளம், உரம், விலங்கு படுக்கைகள் அல்லது துகள் பலகை தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.[6] மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தை உயிர் ஆற்றல் மூலப்பொருளாகப் பயன்படுத்துவது சாதகமானது. ஏனெனில் இதில் குறைந்த அளவில் நீர் உள்ளடக்கம் உள்ளது. புதிய மரக்கட்டைகளுடன் ஒப்பிடும்போது இதில் 20% நீர் உள்ளது.

உலர்ந்த சுவர் உலர்வால் முதன்மையாக ஜிப்சத்தால் ஆனது. ஜிப்சம் சிதைந்தவுடன், இதை சீமைக்காரை உற்பத்தியில் சேர்க்கலாம். மண்ணை காற்றோட்டமான உரமாக்கலில் பயன்படுத்தலாம் அல்லது புதிய உலர்வாலில் மறுசுழற்சி செய்யலாம். ஜிப்சம் மறுசுழற்சி குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நிலப்பரப்பு நிலைகளில் ஜிப்சம் நச்சு வாயுவான ஐதரசன் சல்பைடை வெளியிடும்.

நிலக்கீல் நிலக்கீல், கூழாங்கல் அல்லது நிலக்கீல் பைஞ்சுதையிலிருந்து, பொதுவாக மறுசுழற்சி செய்யப்பட்டு நடைபாதையில் பயன்படுத்தப்படுகிறது.

உலோகம் கழிவிரும்பு என்பது தேவையில்லா உலோக கழிவுகளைச் சேகரிப்பது, வாங்குவது, விற்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்தும் தொழில் முயற்சியில் பெறப்படும் பொருளாகும்.[7]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Sustainable Management of Construction and Demolition Materials". US EPA. 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  2. 2.0 2.1 "Advancing Sustainable Materials Management: 2014 Fact SheetAssessing Trends in Material Generation, Recycling, Composting, Combustion with Energy Recovery and Landfilling in the United States" (PDF). United States Environmental Protection Agency. November 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-02-21.
  3. 3.0 3.1 "Harmful Materials and Residential Demolition". US EPA. 31 January 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  4. 4.0 4.1 "Construction and Demolition Debris (C&DD)". epa.ohio.gov. Ohio EPA Division of Materials and Waste Management. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  5. 5.0 5.1 (PDF). 7 February 2017 https://web.archive.org/web/20170207134250/https://www.colorado.gov/pacific/sites/default/files/HM_sw-beneficial-use-of-asphalt-brick-concrete.pdf. Archived from the original (PDF) on 2017-02-07. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. "Recycling Wood Pallets and Packaging" (PDF). Timber Development Association (NSW). 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-02-21.
  7. "Scrap Metal Merchants Sector" (PDF). United States Environmental Protection Agency. 2016-09-20. பார்க்கப்பட்ட நாள் 2020-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிபாடு_கழிவு&oldid=3773534" இலிருந்து மீள்விக்கப்பட்டது