இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில்
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் என்பது கோயம்புத்தூர் மாவட்டம் இடுகம்பாளையத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயிலாகும். இந்தக் கோயிலிலைச் சுற்றி ஏழு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. [1]
இங்குள்ள ஆஞ்சநேயர் சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமுடையவராக உள்ளார். [2] இந்த சுயம்புப் பாறை எட்டடி உயரமுடையது. இங்குள்ள ஆஞ்சநேயர் 5 அடி அகலமுடையவர். நேரான பார்வையுள்ளவராக இருப்பதை சிறப்பாக கருதுகிறார்கள். இந்த ஆஞ்சநேயர் சிலை நேர்முகப் பார்வையும், வலது கையில் ஆசீர்வாதம் செய்வதுப் போலவும், இடதுக் கையில் சவுகந்திர மலரை வைத்துக் கொண்டும் உள்ளது. தலைக்கு பின்புறமாகத் தெரியும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளதைப் போன்றும், கால்களில் தண்டையுடனும் காட்சி தருகிறது.