இடுப்பு குதிமுள்
இடுப்பு குதிமுள் (Pelvic spur) என்பது போவாசு மற்றும் மலைப்பாம்புகள் போன்ற பழமையான பாம்புகளில் எச்சத் துவாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படும் கால்களின் எச்சவுறுப்புகள் ஆகும். இந்த எச்சங்கள் வெளிப்புறமாகத் தெரியும் வகையில் அமைந்துள்ளது.[1] இடுப்பு வளையம் மற்றும் தொடையெலும்பு எச்சங்களான இவை, முதுகெலும்புடன் எந்த தொடர்பும் இல்லாமல், வெறுமனே தசைப் பகுதியில் பிடிப்பற்று காணப்படும்.[1] பாம்பின் உடலிலிருந்து தொடை எலும்பு நீண்டு, கொம்பு அமைப்பால் மூடப்பட்டிருக்கும். இது குதிமுள் அல்லது நகத்தை ஒத்திருக்கிறது.[1] ஆண் பாம்புகளில் குதிமுள் பொதுவாகப் பெண் பாம்புகளை விட நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். மேலும் இவை பெண் பாம்பினைப் பற்றவும் இனச்சேர்க்கையின் போது பிடிப்பதற்கும் கூச்சப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.[2] மேலும் மற்ற ஆண்களுடன் சண்டையிடவும் பயன்படுத்தப்படுகின்றன.[3]
இந்த குதிமுள் பாலின வேறுபாட்டினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் சில சிற்றினங்களில், பாம்பின் பாலினத்தை அடையாளம் காண இந்த குதிமுள்ளினை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தப்படலாம்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Pough, F. Harvey; Andrews, Robin M. (2001). Herpetology: Third Edition.
- ↑ Gillingham, James C.; Chambers, Jeffrey A. (1982-02-23). "Courtship and Pelvic Spur Use in the Burmese Python, Python molurus bivittatus". Copeia 1982 (1): 193–196. doi:10.2307/1444292.
- ↑ Carpenter, Charles C.; Murphy, James B.; Mitchell, Lyndon A. (June 1978). "Combat Bouts with Spur Use in the Madagascan Boa (Sanzinia madagascariensis)". Herpetologica 34 (2): 207–212. https://archive.org/details/sim_herpetologica_1978-06_34_2/page/207.
- ↑ Hoefer, Sebastian; Robinson, Nathan J.; Pinou, Theodora. "Size matters: Sexual dimorphism in the pelvic spurs of the Bahamian Boa (Chilabothrus strigilatus strigilatus)". Herpetology Notes 14: 201-203. https://www.biotaxa.org/hn/article/viewFile/64162/65092.