இடைச்சொல் விளக்கம்

இடைச்சொல் பெயருக்கு இடையிலேயோ, வினைக்கு இடையிலேயோ, இரண்டு சொற்களுக்கு இடையிலேயோ வரும்.

பெயர்ச்சொல்லோடு

அறிஞன் என்னும் சொல்லில் அறி என்பது வினைச்சொல். ஞ், அன் ஆகியவை இடைச்சொல்.
பொருநன் என்பதில் பொரு என்பது வினைச்சொல். ந், அன் என்பன இடைச்சொல்.
குடையன் என்பதில் குடை என்பது பெயர்ச்சொல். ய் என்னும் உடம்படுமெய்யும், அன் என்னும் ஆண்பால் உணர்த்தும் சொல்லும் இடைச்சொற்கள்.
உழவன் என்னும் சொல்லில் உழவு என்பது பெயர். வ் – என்னும் உடம்படுமெய்யும். அன் – என்னும் பால் உணர்த்தும் கூறுகளும் இடைச்சொல்.
இவை பெயராக்கத்தின்போது வந்தவை.

வினைச்சொல்லோடு

செய்தான் என்பதில் செய் என்பது வினை. த் – என்பது இறந்தகாலம் காட்டும் இடைச்சொல். ஆன் என்பது பால் உணர்த்தும் இடைச்சொல்.
நல்லன் என்பதில் நல் என்பது நன்மைப்பொருள் உணர்த்தும் இடைச்சொல். அன் என்பது பால் உணர்த்தும் இடைச்சொல்.
இவை இரண்டும் வினையாக்கத்தின்போது வந்தன.

வேற்றுமை உருபுகளும் இடைச்சொற்களே.

தொல்காப்பியர் சொல்லதிகாரம் இடையியலில் 40 இடைச்சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை இரண்டு சொற்களுக்கு இடையில் வருபவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைச்சொல்_விளக்கம்&oldid=811410" இருந்து மீள்விக்கப்பட்டது