இட்ரியம்(III) சல்பேட்டு
இட்ரியம்(III) சல்பேட்டு (Yttrium(III) sulfate என்பது Y2(SO4)3 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் காணப்படும் இட்ரியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் நீரில் கரைகிறது. இட்ரியம் செசுகியுசல்பேட்டு, இட்ரியம் சல்பேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்ரியம் செசுகியுசல்பேட்டு
இட்ரியம் சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
13510-71-9 நீரிலி 7446-33-5 எண்நீரேற்று | |
ChemSpider | 145968 |
EC number | 236-844-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166836 |
| |
பண்புகள் | |
Y2(SO4)3 | |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுஇட்ரியம்(III) சல்பேட்டு சேர்மம் சீசியம் சல்பேட்டுடன் வினைபுரிந்து டிரைசல்பேட்டோயிட்ரேட்டு(III) சேர்மத்தைக் கொடுக்கிறது.
- Y2(SO4)3 + 3Cs2SO4 → 2Cs3[Y(SO4)3]
ருபீடியம் சல்பேட்டுடன் இட்ரியம்(III) சல்பேட்டு வினைபுரிந்து ருபீடியம் டிரைசல்பேட்டோயிட்ரேட்டு(III) சேர்மத்தைக் கொடுக்கிறது.
- Y2(SO4)3 + Rb2SO4 → Rb3[Y(SO4)3]
பொட்டாசியம் சல்பேட்டுடன் இட்ரியம்(III) சல்பேட்டு வினைபுரிந்து பொட்டாசியம் டிரைசல்பேட்டோயிட்ரேட்டு சேர்மத்தைக் கொடுக்கிறது.
- Y2(SO4)3 + 3K2SO4 → 2K3[Y(SO4)3][1]
தயாரிப்பு
தொகுஇட்ரியம் ஐதராக்சைடுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இட்ரியம்(III) சல்பேட்டு உருவாகிறது. 2Y(OH)3 + 3H2SO4 → Y2(SO4)3 + 6H2O[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.google.co.in/search?ei=1BeqWqDEC5LMvwT4sIKwCg&q=Yttrium%28III%29+sulfate+chemiday&oq=Yttrium%28III%29+sulfate+chemiday&gs_l=psy-ab.3..33i160k1.83489.86177.0.87165.8.8.0.0.0.0.313.2206.2-6j2.8.0....0...1c.1.64.psy-ab..0.8.2197...0i22i30k1j0i8i13i30k1.0.3abgxS_wyxg
- ↑ https://chemiday.com/en/reaction/3-1-0-10908