இணை (ஒலிப்பு) என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்க்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)

சீர்களின் அமைப்பு

தொகு

இணை என்பது சேர்ந்திருத்தல் எனப்பொருள் பெறும். செய்யுளின் அடியில் 1 மற்றும் 2 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப் பெறின் இணைத்தொடை விகற்பம் எனப்படும்

தொடை விகற்ப வகைகள்

தொகு

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  1. இணை மோனைத் தொடை
  2. இணை இயைபுத் தொடை
  3. இணை எதுகைத் தொடை
  4. இணை முரண் தொடை
  5. இணை அளபெடைத் தொடை

எடுத்துக்காட்டுகள்

தொகு

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" (45-வது திருக்குறள், அறத்துப்பால், இல்லறவியல்)

மேற்கண்ட குறளில் முதலடியில் முதல் மற்றும் இரண்டாம் சீர்கள் "அ" என்று தொடங்க, இரண்டாவது அடியில் "ப" எனத் தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் இணை மோனைத் தொடை வகையைப் பின்பற்றுகிறது எனலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இணை&oldid=4131965" இலிருந்து மீள்விக்கப்பட்டது