விகற்பம் (யாப்பிலக்கணம்)

(விகற்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாப்பிலக்கணத்தில் விகற்பம் எனப்படுவது ஒரு செய்யுளின் அடிகளில் இருக்கும் எதுகைகளின் விளக்கம் ஆகும். நான்கு அடிகளும் ஒரே எதுகை பெற்று வந்தால் அது ஒரு விகற்பம் ஆகும். இரு அடிகள் ஒரு எதுகையும், மற்ற இரு அடிகள் வேறொரு எதுகையும்,பெற்று வந்தால் அது இரு விகற்பம் ஆகும். இரு அடிகள் ஒரு எதுகையும், மற்ற இரு அடிகள் எதுகை பெறாமல், வேறுபட்டு வந்தால் அது மூவிகற்பம்.

ஒரு விகற்பம் தொகு

கீழே காணும் பாடலில் நான்கு வரிகளிலும் ஒரேவகை எதுகைத் தொடை அமைந்து ஒரு விகற்பம் கொண்டதாக வருகிறது.

கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.

இரு விகற்பம் தொகு

முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையையும் (அஞ்சல் - வஞ்சி), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (காணப் - மாணப்) கொண்டு அமைந்து இரு விகற்பம் கொண்டதாக வருகிறது.

அஞ்சல் மடவனமே உன்ற னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்

மூவிகற்பம் தொகு

கீழே காணும் பாடலில் முதல் இரு அடிகளிலும் எதுகைத் தொடை அமைந்து இருக்க மூன்றாம், நான்காம் அடிகள் எதுகையின்றி அமைவதால் இப்பாடல் மூன்று விகற்பம் உடையதாகிறது.

யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகற்பம்_(யாப்பிலக்கணம்)&oldid=2801144" இலிருந்து மீள்விக்கப்பட்டது