இணைய ஆயுதம்

இணைய ஆயுதம் (cyberweapon) என்பது பொதுவாக இணையத் தாக்குதலின் ஒரு பகுதியாக படைத்துறை, துணைப்படை அல்லது உளவுத்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தீப்பொருள் முகவர்கள் என வரையறுக்கப்படுகிறது. இதில் கணினி நச்சுநிரல்கள், திராயன் குதிரைகள், உளவுமென்பொருள், கணினிப் புழுக்கள் ஆகியவை உள்ளடங்கும். அவை ஏற்கனவே உள்ள மென்பொருளில் தீங்கிழைக்கும் குறியீட்டை அறிமுகப்படுத்தலாம். இதனால் கணினி அதன் செயற்படுத்துனராலரால் திட்டமிடப்படாத செயல்கள் அல்லது செயல்முறைகளைச் செய்கிறது.

சிறப்பியல்புகள்

தொகு

ஓர் இணைய ஆயுதம் பொதுவாக ஒரு நாடு அல்லது நாடு அல்லாதவர்களால் தன் இலக்கை அடைய நிதியுதவி செய்யப்படுகிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது. உளவுச்சதி அல்லது பலத்தைப் பயன்படுத்தி நோக்கத்தை பூர்த்தி செய்தல், குறிப்பிட்ட இலக்குகளுக்கு எதிராக செயற்படல் ஆகிய இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இணைய ஆயுதத்தை செயற்படுத்த பொதுவாக ஒரு படைவீரர் அல்லது உளவாளி தேவையாகவுள்ளது. மேலும் இது சமதான காலத்தில் நிதியுதவியளிப்பவரின் மனித முகவரால் நேரடியாகச் செய்யப்பட்டால் அது சட்டவிரோதமாகவோ அல்லது போர்ச் செயலாகவோ கருதப்படும். குறித்த நாட்டின் இறையாண்மை மீறல், இலக்கின் தனியுரிமை மீறல் ஆகியன சட்டச் சிக்கல்களாக அமைகின்றன.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_ஆயுதம்&oldid=3944728" இலிருந்து மீள்விக்கப்பட்டது