இண்டியம் காலியம் ஆர்சனைடு பாசுபைடு

உலோகக் கலவை

இண்டியம் காலியம் ஆர்சனைடு பாசுபைடு (Indium gallium arsenide phosphide) என்பது (GaxIn1−xAsyP1−y என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நான்கிணைதிற சேர்ம குறைகடத்திப் பொருளாகும். காலியம் ஆர்சனைடு, காலியம் பாசுபைடு, இண்டியம் ஆர்சனைடு அல்லது இண்டியம் பாசுபைடு ஆகியவற்றின் உலோகக் கலவையாக இச்சேர்மம் கருதப்படுகிறது. இவ்வுலோகக் கலவையின் மோல் விகிதங்களான x மற்றும் y ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இச்சேர்மத்தின் ஆற்றல் இடைவெளியை மாற்றியமைக்கும் திறன் காரணமாக இந்த சேர்மம் ஒளியன் சாதனங்களில் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

இண்டியம் பாசுபைடு அடிப்படையிலான ஒளியன் ஒருங்கிணைந்த சுற்றுகள் பொதுவாக குவாண்டம் கிணறுகள், அலை வழிகாட்டிகள் மற்றும் பிற ஒளியன் கட்டமைப்புகளை உருவாக்க GaxIn1−xAsyP1−y என்ற வாய்ப்பாட்டிலான உலோகக்கலவைகளைப் பயன்படுத்துகின்றன.

சூரிய ஆற்றல் திட்டங்களுக்கான பிரானோபர் நிறுவனம் Ga0.93In0.07As0.87P0.13 என்ற உலோகக் கலவையைப் பயன்படுத்தி மூன்று-சந்தி சூரிய மின்கலத்தை அறிவித்தது. இதன் மிக அதிக செயல்திறன் 35.9% ஒரு சாதனை என்றும் கூறப்பட்டது.[1][2]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Fraunhofer ISE achieves 35.9% efficiency for III-V triple-junction solar cell based on silicon. pv magazine group GmbH & Co. KG. April 23, 2021. 
  2. "Tandem Photovoltaics Enables New Heights in Solar Cell Efficiencies – 35.9 % for III-V//Silicon Solar Cell". Fraunhofer Institute for Solar Energy Systems ISE. April 23, 2021.

புற இணைப்புகள்

தொகு