இதயப் புற்றுநோய்

இதயப் புற்றுநோய் (heart cancer) என்பது இதயத் தசை உயிரணுக்களில் தோன்றும் ஓர் அரிதான புற்றுநோய் ஆகும். இது முதன்மை இதயக் கட்டி, மற்றும் இரண்டாந்தர இதயக் கட்டி என இரு வகைப்படும். மென்திசுக்களில் தோன்றும் முதன்மைக் கட்டி பொதுவாக ஊறுவிளைவிக்காத சாதாரணக் கட்டியாகவே உள்ளது. இரண்டாந்தர புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.

இதயப் புற்றுநோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
ஐ.சி.டி.-10C38.0, D15.1
ஐ.சி.டி.-9164.1, 212.7
ம.பா.தD006338

முதல்நிலைப் புற்று, இதயத்தில் வெகு அரிதாகவே தோன்றுகிறது. 0.1% அளவே காணப்படுகிறது. மேயோ மருத்துவமனையில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு நோயாளியே பதிவு செய்யப்படுகிறார்.[1]

நிறமி உயிரணுப்புற்றும் பிற மென்திசுப் புற்றும் இதயத்திற்குப் பரவுகிறது. இதன் காரணமாக,

  • இதயத்திற்குப் பாயும் இரத்தம் தடைபடலாம்.
  • இதயத் தசை விறைப்புடன் காணப்படும்.
  • இதய ஒருவழித் திறப்பு- வால்வுகள்- பாதிக்கப்படலாம்.
  • இரத்த ஓட்டம் சீரற்றுப் போகலாம்.
  • நோய்முற்றிய நிலையில் மாற்று வால்வு பொருத்த வேண்டியது நிலை வரலாம்.

இந்நிலையில் நலம்பெறுவது கடினம். கார்சினாய்ட் (carcinoid) மிகவும் மெதுவாக வளரும் கட்டிகளாகும். இவைகள் அதிக இயக்கு நீரைச் சுரக்கும். இதன் காரணமாக வால்வு பழுதடையும் வாய்ப்பு அதிகம்.

மருத்துவமே இதயத்தினைப் பாதிக்கக் கூடும். வேதிமருத்துவமும் இதில் அடங்கும். கதிர் மருத்துவம் பின்நாளில் சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். இயக்குநீர் மருத்துவமும் விதிவிலக்கல்ல. இதயத்திற்குப் புற்றை எதிர்க்கும் பண்பு உள்ளது. இதன் காரணமாகவே இந்நோய் அரிதாக உள்ளது. சிறுநீர் சுரப்பி நுரைஈரல் புற்றுகளிலிருந்து இதய துணைப்புற்றுத் தோன்றுகிறது. கதிர் மருத்துவமும் தொடர்ந்து அறுவை மருத்துவமும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Heart cancer: Is there such a thing? - MayoClinic.com". பார்க்கப்பட்ட நாள் 2009-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயப்_புற்றுநோய்&oldid=2746324" இலிருந்து மீள்விக்கப்பட்டது