இதய அடைப்பு
இதய அடைப்பு (Heart block) என்பது இதயத்தின் மின்கடத்தலில் உண்டாகும் தடை ஆகும். இதயஅடைப்பும் மாரடைப்பும் வெவ்வேறு. மாரடைப்பு என்பது இதய இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாவது. மாரடைப்பு நெஞ்சு வலியை உண்டாக்கும். இதய அடைப்போ படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் ஆகியவற்றை உண்டாக்கும்.[1][2][3]
இதய அடைப்பு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இதயவியல் |
ஐ.சி.டி.-10 | I44.-I45. |
ஐ.சி.டி.-9 | 426.9 |
நோய்களின் தரவுத்தளம் | 10477 |
ம.பா.த | D006327 |
இதயம் சீராக சுருங்கி விரிவது இதயத்தின் மின்னோட்ட ஒழுங்கு முறைமையில் தான். இதய மேலறைகள் சுருங்கும் போது கீழறைகள் விரிவடைய வேண்டும். இதயத் துடிப்பு இதயத்தில் SA முடிச்சு எனும் இடத்தில் பிறக்கிறது. இது AV முடிச்சை அடையும் போது அதன் ஓட்டத்தில் சிறிது தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இதுவே இதய மேலறைகள் சுருங்கும் போது கீழறைகள் விரிவடைய உதவுகிறது.
இதய அடைப்பை மூன்று நிலைகளாய்ப் பிரிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Logan, Carolynn M.; Rice, M. Katherine (1987). Logan's Medical and Scientific Abbreviations. J. B. Lippincott and Company. pp. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-397-54589-4.
- ↑ "Conduction Disorders". sitecoreprod.heart.org|beta.heart.org|www.heart.org|heart.org|*.azurewebsites.net|localhost (in ஆங்கிலம்).
- ↑ Electrophysiology: A Companion Guide, Steinberg (ed.), p. 142